;
Athirady Tamil News

பாகிஸ்தான் அணிக்கு 298 ஓட்டங்கள் வெற்றியிலக்கு!!

0

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 ஆவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு வெற்றியிலக்காக 298 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்பிற்கு 297ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் தனுஷ்க குணதிலக 133 ஓட்டங்களையும் தசுன் சானக 43 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டிருந்தனர்.

பாகிஸ்தான் அணி சார்பில் பந்து வீச்சில் மொஹமட் அமீர் 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

பாகிஸ்தான் – இலங்கை அணிகளுக்கு இடையில் கடந்த 27 ஆம் திகதி இடம்பெறவிருந்த 1 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

அதனை அடுத்து 2 ஆவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் 67 ஓட்டங்கள் வித்தியசாத்தில் வெற்றி பெற்றிருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 + two =

*