;
Athirady Tamil News

கிளிநொச்சி நகர் முஸ்லிம் பள்ளிவாசல் இன்று திறந்து வைக்கப்பட்டது.!! (படங்கள்)

0

கிளிநொச்சி நகர் முஸ்லிம் பள்ளிவாசல் இன்று திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றது. கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகத்தின் பின்புறமாக அமைந்துள்ள குறித்த பள்ளிவாசல் யுத்த்தின் பின்னர் படிப்படியாக அபிவிருத்தி செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் குறித்த பள்ளிவாசல் இன்று முழுமையாக்கப்பட்டு இஸ்லாமியர்களின் தொழுகை வழிபாட்டிற்காக இன்று திறந்து கையளிக்கப்பட்டது. சவுதிஅரேபியாவிலிருந்து வருகை தந்த அரபியர்கால் குறித்த பள்ளிவாசல் திறந்து வைக்கப்பட்டது, குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்தில் வாழும் இஸ்லாமியர்கள் பலரும் கலந்து கொண்டனர். குறித்த நிகழ்விற்கு சவுதி அரேபியாவிலிருந்து அலி ஹாஇத் தந்தையும் அவரது மகனான Saad aliani ஆகிய இருவரும் வருகை தந்திருந்தமை குறிப்பிடதக்கதாகும்.

குறித்த பள்ளிவாசல் புனரமைப்பு செய்யப்பட்டு கையளிக்கப்பட்டமை தொடர்பில் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − sixteen =

*