சாலையில் தூங்கிக்கொண்டிருந்த வீடற்றவர்களை கொடூரமாக கொன்று ரசித்த சைக்கோ மனிதன்..!!

அமெரிக்காவில் சாலையில் தூங்கிக்கொண்டிருந்த வீடற்ற நான்கு பேரை , மர்ம நபர் ஒருவன் ஆயுதத்தால் அடித்தே கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூயாரக்கின் Chinatown மாவட்டம், Manhattan’s Lower East Side நகரிலே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது
இச்சம்பவத்தை உறுதி செய்த நியூயார்க் பொலிஸ், தாக்குதல் குறித்து அவசர உதவி எண் 911 அழைப்பு வந்ததை அடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்தோம்.
அங்கு தலையில் பலமாக தாக்கப்பட்டு மயக்க நிலையில் இளைஞர் ஒருவர் இருந்தார். சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
அதே பகுதியில் 49 வயதுடைய இன்னொரு நபர் இதே போல் தலையில் தாக்கப்பட்டு கிடந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.
இதனையடுத்து, அப்பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் இதே போல் தலையில் அடிப்பட்டு மர்மமான முறையில் மேலும் 3 பேர் கொல்லப்பட்டு கிடந்தனர்.
இக்கொலை சம்பவம் தொடர்பில் இரும்பு ஆயுதத்துடன் வலம் வந்த 24 வயதுடைய சந்தேக நபரை கைது செய்து விாசரணை மேற்கொண்டு வருவதாக நியூ யார்க் பொலிஸ் தெரிவித்துள்ளது