;
Athirady Tamil News

மட்டக்களப்பு – விளாவட்டவான் ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய பால்குட பவனி!! (படங்கள்)

0

மட்டக்களப்பு – விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ வீரமா காளியம்மன் ஆலய வருடாந்த உற்சவ பால்குட பவனி இன்று இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ வீரமா காளியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவ பெருவிழா இன்று ஆரம்பமானது.

நாவற்காடு அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து ஆரம்பமான பால்குட பவானியானது பிரதான வீதியின் ஊடாக அன்னை ஸ்ரீ வீரமா காளியம்மன் ஆலயத்தை சென்றடைந்துள்ளது.

ஓம் சக்தி ஓம் பராசக்தி என உச்சரித்தவாறு அடியார்கள் தமது சிரசினில் பால்குடங்களை சுமந்துவந்து அம்பாளுக்கு பாலாபிஷேகம் இடம்பெற்றுள்ளது.

பாலாபிஷேகத்தினை தொடர்ந்து அலங்கார பூசைகள் இடம்பெற்றிருந்தது.

கிழக்கிலங்கையில் 6ஆடி உயரத்தில் கருங்கல் திருவாசியுடன் மூல விக்ரகம் அமையப்பெற்ற முதல் ஆலயம் எனும் சிறப்பினை பெற்றுள்ளது இவ் ஆலயம்.

இன்று பால்குட பவனியுடன் ஆரம்பமான அன்னையின் சடங்குற்சவ பெருவிழா எதிர்வரும் 13 ஆம் திகதி அதிகாலை தீ மிதித்தல் மற்றும் பள்ளயத்துடன் இனிதே நிறைவடைய இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + 17 =

*