;
Athirady Tamil News

தண்ணீரில் மூழ்கடித்து 2 குழந்தைகள் கொலை – தாய் வெறிச்செயல்..!!!

0

நெல்லை மாவட்டம் களக்காடு தோப்பு தெருவை சேர்ந்தவர் நம்பிராஜன் (வயது30). இவரது மனைவி சங்கரி(27). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. 2½ வயதில் வர்ஷினி என்ற மகளும், 3 மாதமே ஆன முத்து அசித் என்ற ஆண் குழந்தையும் இருந்தது.

நம்பிராஜன் சென்னையில் தங்கியிருந்து தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். அவரது மனைவி சங்கரி தனது 2 குழந்தைகளுடன் களக்காட்டில் குடியிருந்து வந்தார். இந்தநிலையில் இன்று சங்கரி தனது வீட்டில் தண்ணீர் நிரப்பப்பட்டிருந்த ஒரு பாத்திரத்தில் தனது 2 குழந்தைகளையும் ஒருவர் பின் ஒருவராக போட்டு மூழ்கடித்தார்.

இதனால் 2 குழந்தைகளும் மூச்சு திணறி பரிதாபமாக இறந்தன. நம்பிராஜன் வீட்டில் பாத்திரம் உருளும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து பார்த்தனர். அப்போது 2 குழந்தைகளும் பாத்திரத்தில் இருந்த தண்ணீரில் மூழ்கிய நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து களக்காடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதா, சப்-இன்ஸ்பெக்டர் லிவி பால்ராஜ் மற்றும் போலீ சார் வந்தனர். அவர்கள் 2 குழந்தைகளின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்பு 2 குழந்தைகளையும் தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற தாய் சங்கரியை கைது செய்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிந்து 2 குழந்தைகளையும் கொன்றது ஏன்? என்று தாய் சங்கரியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் சங்கரி எதுவும் கூறாமல் மவுனமாக இருந்துள்ளார்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சங்கரி கடந்த சில மாதங்களாக மனநிலை பாதித்து இருந்தது தெரிய வந்துள்ளது. இதனால் ஆத்திரத்தில் 2 குழந்தைகளையும் கொன்றி ருக்கலாம் என கூறப்படுகிறது. இருந்த போதிலும் 2 குழந்தைகளையும் சங்கரி கொலை செய்ததற்கு வேறு ஏதேனும் காரணமா? என்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெற்ற குழந்தைகளை தண்ணீரில் மூழ்கடித்து அவர்களது தாயே கொடூரமாக கொலை செய்த சம்பவம் களக்காடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen + 16 =

*