;
Athirady Tamil News

சந்தேக நபர் தப்பிச் சென்றதால் கான்ஸ்டபில் ஒருவர் பணி நீக்கம்!!

0

பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் ஒருவர் சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் பெலிஅத்த பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பெலிஅத்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய கான்ஸ்டபில் பண்டார என்பவரே இவ்வாறு சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பெலிஅத்த பொலிஸ் நிலைய சிறையில் இருந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று (07) மதியம் தப்பிச் சென்றிருந்தார்.

இதனால் குறித்த சந்தேக நபர் தப்பிச் சென்ற சந்தர்ப்பத்தில் சேவையில் இருந்த கான்ஸ்டபிலை சேவையில் இருந்து நீக்கியதாக உதவி பொலிஸ் பரிசோதகர் சனத் அமரசிங்க தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven − four =

*