;
Athirady Tamil News

இந்திய துணை கண்டத்திற்கான அல் கொய்தா தளபதி கொல்லப்பட்டான்..!!

0

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மற்றும் அல்கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டுவருகிறது. அந்த பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்கும் நோக்கில் ஆப்கானிஸ்தான் அரசு படைகளுடன் இணைந்து அமெரிக்க படைகளும் தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் ஹெல்மண்ட் மாகாணத்தின் மூசா ஹலா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அமெரிக்கா-ஆப்கானிஸ்தான் படைகள் இணைந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதில் இந்திய துணை கண்டத்துக்கான அல்கொய்தா தளபதி அசீம் உமர் உள்பட 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த அசீம் உமர் இந்தியாவில் பிறந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 + two =

*