;
Athirady Tamil News

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான 10 சுவாரஸ்ய தகவல்கள்!!

0

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுத் தாக்கல் திங்கள் கிழமையுடன் நிறைவு பெற்றுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் முறைமை அறிவிக்கப்பட்ட ஆண்டு முதல் இதுவரை 7 ஜனாதிபதி தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.

பிரதமர் ஆட்சியாக காணப்பட்ட இலங்கையின் ஆட்சி முறை, 1978 ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட அரசியலமைப்பின் பிரகாரம், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அமுல்படுத்தப்பட்டது.

இதன்படி, கடந்த 7 ஜனாதிபதித் தேர்தல்களையும் விட இந்த முறை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் முற்றிலும் மாறுப்பட்ட, பலரும் எதிர்பார்க்காத பல சம்பவங்கள் பதிவாகியுள்ள ஒரு தேர்தலாக மாற்றம் பெற்றுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான 10 முக்கிய விடயங்கள்.

$ ஆட்சியிலுள்ள ஜனாதிபதியொருவர், ஆட்சியிலுள்ள பிரதமர் மற்றும் பதவியிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் போட்டியிடாத ஒரு ஜனாதிபதித் தேர்தல் இது.

$ இலங்கை வரலாற்றில் அதிகளவிலான வேட்பாளர்கள் போட்டியிடும் ஜனாதிபதித் தேர்தலாக இது பதிவாகியுள்ளது. (35 வேட்பாளர்கள்)

$ அதிகளவிலான வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்த ஜனாதிபதி தேர்தலாக இது பதிவாகியுள்ளது. (41 வேட்பு மனுக்கள்)

$ அதிநீளமான வாக்குச்சீட்டை கொண்ட ஜனாதிபதி தேர்தலாக இது பதிவாகின்றது. (2 அடி நீளத்தை விடவும் பெரிதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது)

$ இலங்கை வரலாற்றில் அதிக செலவீனத்தை கொண்ட ஜனாதிபதி தேர்தல் இதுவாகும் (400 கோடி ரூபாவிற்கும் அதிக தொகை செலவிடப்படவுள்ளது)

$ வாக்குபெட்டிகள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளன.

$ 20 ஆண்டுகளுக்கு பின்னர் முதற்தடவையாக பெண்ணொருவர் ஜனாதிபதித் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார். (1999ஆம் ஆண்டு தேர்தலில் இறுதியாக பெண்கள் போட்டியிட்டிருந்தனர்)

$ போட்டியிடும் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் இதுவாகும். (சுப்ரமணியம் குணரத்னம்)

$ ஜனாதிபதி ஆட்சியிலுள்ள பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி போட்டியிடாத முதலாவது ஜனாதிபதி தேர்தல்.

$ சுயாதீன ஆணைக்குழு அமைக்கப்பட்ட நிலையில், ஆணைக்குழுவின் கீழ் நடத்தப்படும் முதலாவது ஜனாதிபதித் தேர்தல். (இதற்கு முன்னர் தேர்தல் திணைக்களத்தின் கீழ் தேர்தல்கள் நடத்தப்பட்டன.)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 1 =

*