;
Athirady Tamil News

ஜனா­தி­பதி தேர்தல் முடி­வினை அறி­விப்­பதில் கால­தா­மதம் ஏற்­படும்!!

0

வர­லாற்றில் என்­று­மில்­லா­த­வாறு ஜனா­தி­பதி தேர்­தலில் மிகப்­பெ­ரிய வாக்குச் சீட்டு இம்­முறை பயன்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது. வேட்­பா­ளர்­களின் எண்­ணிக்கை 35 ஆக அதி­க­ரித்­துள்­ள­மை­யினால் இந்த நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. 26 அங்­குல நீள­மான வாக்­கு­ச்சீட்டே அச்­ச­டிக்­கப்­ப­ட­வுள்­ளது என்று தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்தார்.

வேட்­பா­ளர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ள­மை­யினால் தேர்­த­லுக்­கான செலவும் அதி­க­ரித்­தி­ருக்­கின்­றது. 500 கோடி ரூபா வரையில் இதற்கு செல­விட வேண்­டிய தேவை ஏற்­பட்­டுள்­ளது. மிக நீண்ட வாக்­குச்­சீட்டு என்­ப­தனால் வாக்­கு­களை எண்ணும் நட­வ­டிக்­கை­யிலும் தாமதம் ஏற்­படும். இதனால் ஜனா­தி­பதி தேர்தல் முடி­வு­களை வெ ளியி­டு­வதில் நிச்­ச­ய­மாக தாமதம் ஏற்­படும். 18 ஆம் திகதி காலை மணிக்கு முன்னர் உத்­தி­யோ­க­பூர்வ முடி­வு­களை வெ ளியிட முடியும் என்று எதிர்­பார்க்­கின்றோம் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

தேசியப் பத்­தி­ரி­கை­களின் ஆசி­ரி­யர்­களை தேர்­தல்கள் செய­ல­கத்தில் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய நேற்று சந்­தித்துக் கலந்­து­ரை­யா­டினார். இந்தச் சந்­திப்பின் போது ஊட­கங்கள் பக்­கச்­சார்­பின்றி செய்­தி­களை வெ ளியிட வேண்­டி­யதன் அவ­சியம் குறித்து அவர் வலி­யு­றுத்­தினார்.

இங்கு அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில் கூறி­ய­தா­வது,

ஜனா­தி­பதி தேர்தல் அறி­விக்­கப்­பட்டு வேட்­பு­மனுத் தாக்­கலும் நிறை­வ­டைந்­துள்­ளது. ஜனா­தி­பதி தேர்தல் தொடர்பில் ஊட­கங்கள் பக்­கச்­சார்­பின்றி செயற்­பட வேண்டும். குறித்த ஒரு வேட்­பா­ள­ருக்கு அதி­க­ளவு ஆத­ரவை வழங்­கியும் மற்­றைய வேட்­பா­ள­ருக்கு குறிப்­பி­டத்­தக்­க­ளவு ஆத­ரவை வழங்­கா­மலும் செயற்­ப­டு­வது தவ­றா­ன­தாகும். உண்­மைக்குப் புறம்­பான தக­வல்­களை வெளி­யி­டு­வது ஜனா­தி­பதி தேர்தல் சட்­டத்தின் கீழ் தண்­ட­னைக்­கு­ரிய குற்­ற­மாகும்.

மத ஸ்தலங்­களில் வேட்­பா­ளர்­களை ஆத­ரிக்கும் கூட்­டங்­களை நடத்த முடி­யாது. இம்­முறை வேட்­பா­ளர்­களின் எண்­ணிக்கை 35 ஆக அதி­க­ரித்­துள்­ள­மை­யினால் வாக்­குச்­சீட்டு நீள­மா­ன­தாக அமை­ய­வுள்­ளது. 26 அங்­குலம் நீள­மான வாக்­குச்­சீட்டே அச்­ச­டிக்­கப்­ப­ட­வுள்­ளது. வாக்­குச்­சீட்டு நீள­மாக உள்­ள­மை­யினால் வாக்­கு­களை எண்ணும் போது கால­தா­மதம் ஏற்­படும். 175 நிலை­யங்­களில் வாக்கு எண்ணும் பணிகள் இடம்­பெ­ற­வுள்­ளன. வேட்­பா­ளர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ள­மை­யினால் தேர்­த­லுக்­கான செலவும் அதி­க­ரித்­துள்­ளது. இம்­முறை 500 கோடி ரூபா வரையில் செலவு ஏற்­படும் என்று மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. வேட்­பு­மனு தாக்கல் செய்யும் நிகழ்­வுக்கு 20 இலட்சம் ரூபா­வுக்கு மேல் செல­வி­டப்­பட்­டுள்­ளது.

வாக்­குச்­சீட்டு நீள­மாக உள்­ள­மை­யினால் புதிய வாக்­குப்­பெட்­டி­களை தயா­ரிக்க வேண்­டி­யுள்­ளது. அத்­துடன் வாக்கு எண்ணும் நிலை­யங்­க­ளிலும் வச­தி­களை செய்ய வேண்­டி­யுள்­ளது. வாக்கு எண்ணும் நிலை­யங்­களில் பெரிய இட­வ­சதி உள்ள இடங்­களை தெரிவு செய்ய வேண்­டி­யி­ருக்­கி­றது. கடந்த ஜனா­தி­பதி தேர்­தலின் போது தேர்தல் முடி­வு­களை மறுநாள் 9 மணிக்கு முன்னர் வெ ளியிட்­டி­ருந்தோம். ஆனால் இம்­முறை அவ்­வாறு துரி­த­க­தியில் இறுதி முடி­வு­களை வெ ளியிட முடி­யாது. எவ்­வா­றா­யினும் 18 ஆம் திகதி காலை 6 மணிக்கு முன்னர் உத்­தி­யோ­க­பூர்வ முடி­வு­களை அறி­விப்போம். 18 ஆம் திகதி புதிய ஜனா­தி­பதி பத­வி­யேற்க முடியும்.

தேர்தல் பிர­சார காலத்தில் விட­யத்­துக்குப் பொறுப்­பான அமைச்­சர்கள் தமது அமைச்சு சம்­பந்­தப்­பட்ட நிகழ்­வு­களில் கலந்­து­கொள்ள முடியும். ஆனால் அந்த வைப­வங்­களில் ஜனா­தி­பதி தேர்தல் தொடர்­பிலோ அல்­லது அர­சியல் ஆதாயம் பெறும் வகையிலோ பேசமுடியாது.

சமூக வலைத்தளங்களில் வெ ளியிடப்படும் தவறான செய்திகள் தொடர்பில் எமக்கு முறையிட்டால் அது தொடர்பில் நடவடிக்கை எடுப்போம். பேஸ்புக், டுவிட்டர், யுரியூப் ஆகிய நிறுவனங்கள் எம்முடன் இவ்விடயம் தொடர்பில் இணக்கம் தெரிவித்துள்ளன.

எல்பிட்டி பிரதேச சபைக்கு இடம்பெறுகின்ற தேர்தல் முடிவுகளை அன்று மாலை 6.30 மணியளவிலேயே வெ ளியிட முடியும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 + twenty =

*