;
Athirady Tamil News

ஐக்கிய அமெரிக்காவின் மனித உரிமை போராளி மார்டின் லூதர் கிங் நோபல் பரிசு பெற்ற தினம் – அக்.14, 1964..!!

0

ஐக்கிய அமெரிக்காவில் சமூக உரிமைக்காக போராடிய மாபெரும் ஆப்பிரிக்க-அமெரிக்கத் தலைவர் மார்டின் லூதர் கிங். இவர் அமெரிக்க குருமார்களில் ஒருவர், ஆர்வலர், மற்றும் ஆப்பிரிக்க அமெரிக்க மனித உரிமை இயக்கத்தில் தலைவராக இருந்தவர்.

இவர் காந்திய வழியில் சிறந்த வன்முறையற்ற அறப்போராட்டத்தைப் பயன்படுத்தியவர். மார்ட்டின் லூதர் கிங் அமெரிக்க முற்போக்கு வரலாற்றில் ஒரு தேசிய சின்னமாகக் கருதப்படுகிறார். மாண்ட்கோமரி பேருந்து புறக்கணிப்பு போராட்டம், நிற பாகுபாட்டிற்கு எதிரான போராட்டம் ‘வேலையும் சுதந்திரமும் வேண்டி வாஷிங்டனுக்கு பேரணி’ ஆகியவற்றை முன்னின்று நடத்தியுள்ளார். தெற்குக் கிழக்காசிய தலைவர்கள் மாநாடு நிகழவும் உதவினார்.

அக்டோபர் 14, 1964 ஆம் ஆண்டில் வன்முறையற்ற வகையில் நிறவெறிக்கெதிராக பாடுபட்டதற்காக மார்ட்டின் லூதர் கிங்குக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் 1968 ஏப்ரல் 4 ஆம் நாள் டென்னசி மாநிலத்தில் மெம்ஃபிஸ் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 1 =

*