;
Athirady Tamil News

ஊர்காவற்றுரைக்கும் அனலைத்தீவுக்கும் இடையில் பயணிகள் படகு சேவை!!

0

யாழ். ஊர்காவற்றுரைக்கும் அனலைத்தீவுக்கும் இடையிலான பயணிகள் படகு சேவை ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த படகை மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வி. சிவஞானசோதி ஊர்காவற்றுரை பிரதேச செயலகத்திடம் கையளித்துள்ளார்.

சுமார் 137 மில்லியன் ரூபா செலவில் கொள்வனவு செய்யப்பட்டுள்ள இந்த படகுக்கு ´எழுந்த தாரகை´ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த படகில் ஒரே தடவையில் 100 பயணிகள் வரையில் பயணிக்க முடியும் என மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படகு கடற்படையின் பூரண அனுசரனையில் இயங்கவுள்ளமை குறிப்பிடதக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen + eleven =

*