;
Athirady Tamil News

கல்வியில் தேசிய கொள்கை ஒன்றை வகுத்து, பாரிய நிதியை முதலீடு செய்ய வேண்டும் !!

0

கல்வியில் தேசிய கொள்கை ஒன்றை வகுத்து, உயர் கல்வியை தொடர தேவையான பாரிய நிதியை முதலீடு செய்ய வேண்டும் என கோட்டாபய தெரிவித்துள்ளார்.

மேலதிக வகுப்பு ஆசிரியர்கள் மத்தியில் கலந்து கொண்டு நேற்று (13) கருத்து தெரிவிக்கும் போதே அவர் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இலவச கல்வி எமக்கு கிடைத்தாலும் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது கல்விக்காக நாம் முதலீடு செய்யும் நிதி மிகக் குறைவு.

நாங்கள் சௌபாக்கியமான நாடு ஒன்று குறித்தும், பொருளாதார வளர்ச்சி குறித்தும் கதைக்கிறோம். இவற்றுக்கான பிரதான தடை நிபுணத்துவம் மிக்க இளைஞர் யுவதிகள் இன்மை.

நாங்கள் இதற்காக நீண்ட மற்றும் குறுகிய கால தீர்வுகளை தேட வேண்டும். கல்வியில் தேசிய கொள்கைகளை வகுத்து, கல்வியில் இடைநிறுத்தப்படும் மாணவர்களுக்காக ஒரு தீர்வை பெற்றுத்தர வேண்டும்.

அதனால் இவர்களுக்கான உயர் கல்வியை தொடர தேவையான பாரிய நிதியை முதலீடு செய்ய வேண்டும் எனவும் கோட்டாபய தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight + 8 =

*