;
Athirady Tamil News

எல்பிட்டிய தேர்தல் ஒருபோதும் ஜனாதிபதி தேர்தலுடன் ஒத்துப்போவதில்லை!!

0

எல்பிட்டிய தேர்தல் ஒருபோதும் ஜனாதிபதி தேர்தலுடன் ஒத்துப்போவதில்லை என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

மோதர, கிம்புலாகல பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார நடவடிக்கையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்றதாகவும் அதில் பெற்றுக் கொண்ட வெற்றியின் ஊடாக செய்யவேண்டிய அனைத்தையும் செய்ய முடியாமல் போனாலும் ஜனநாயகத்தை பாதுகாக்க முடிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எஞ்சியுள்ள பகுதியை நவம்பர் 16 ஆம் திகதிக்கு பின்னர் பெற்றுக் கொள்ளும் வெற்றியின் ஊடாக நிவர்த்தி செய்ய எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டையே வெற்றியடைய செய்யும் நடவடிக்கையை முன்னெடுப்பதாகவும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிகளுக்கு இடையில் உண்மையான ஒற்றுமை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 57 சதவீதம் வாக்குகளை ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக் கொள்ளும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 3 =

*