;
Athirady Tamil News

நாட்டை பிளவு படுத்தாமல் அதிகார பகிர்வை மேற்கொள்வதே எமது இலக்காக இருக்க வேண்டும்!!

0

அரசியலமைப்பு சீர்திருத்தம் குறித்து பேசிய பெரும்பான்மையான தரப்பினர் தற்போதைய நிலையில் ஒற்றையாட்சி இலங்கையினுள் அதிகார பகிர்வு தொடர்பில் உடன்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டை பிளவு படுத்தாமல் அதிகார பகிர்வை மேற்கொள்வதே எமது இலக்காக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

யாழ்ப்பாண காரியாலயத்தில் நேற்று (16) இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பிலான இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கும் மற்றும் பொதுமக்களும் உள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அதன் காரணமாக பெரும்பான்மை மக்களின் ஆதரவினை பெற்றுக் கொண்டு அரசியலமைப்பு சீர்திருத்த பணியை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது, ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்ற பின்னர் அரசியலமைப்பு சீர்திருத்த பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த பிரதமர், அரசியலமைப்பு திருத்தம் மட்டுமன்றி, பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்தங்களை மேம்படுத்தும் நடவடிக்கைகளை முன்னோக்கி கொண்டு சென்று, இலங்கையை அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்ற வேண்டுமானால், ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்று, அதன் பின்னர் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலிலும் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 + nineteen =

*