;
Athirady Tamil News

யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவை நவம்பரில் ஆரம்பம்!!

0

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கும் சென்னை உள்ளிட்ட தமிழக நகரங்களுக்கு இடையேயான பயணிகள் விமான சேவை நவம்பர் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படும் என்று இலங்கைக்கான இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.

இதையடுத்து, சென்னையில் இருந்து வந்த முதல் விமானம் இங்கு தரையிறங்கியது.

சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை இன்று காலை 8 .55 மணிக்கு சென்னை மீனம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்ட விமானம், யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது.

இந்த விமானத்தில் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.
விமான ஊழியா்கள் மற்றும் அதிகாரிகள் உள்பட 16 போ் மட்டுமே பயணித்தனர்.

அவர்களுக்கு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குடிவரவு குடி அகல்வு திணைக்கள அதிகாரிகளால் நுழைவிசைவு (விசா) வழங்கப்பட்டது.

“முதல்கட்டமாக, மதுரை, கோவை, திருச்சி, சென்னை, மும்பை, திருவனந்தபுரம் நகரங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமானம் இயக்கப்பட உள்ளது” என்று இந்திய அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கும் சென்னை விமான நிலையத்துக்கும் இடையிலான பயணிகள் விமான சேவை, நவம்பர் 1ஆம் திகதி இருந்தே ஆரம்பமாகும் என்று இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் பேச்சாளர் ஒருவர், தெரிவித்தார்.

முன்னதாக, வரும் 27ஆம் திகதி சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் திறப்பு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்று திறந்து வைப்பு!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 − one =

*