;
Athirady Tamil News

பாரிசில் திருடுபோன 8 லட்சம் யூரோ மதிப்புள்ள கைக்கடிகாரம்.. விசாரணையில் அம்பலமான உண்மை..!!!

0

பிரான்சின் பாரிசில் திருடப்பட்ட மதிப்புள்ள கைக்கடிகாரம், போலியானது என்று தெரிய வந்துள்ளது.

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில், கடந்த இருவாரங்களுக்கு முன்பு கைக்கடிகாரம் ஒன்று திருடப்பட்டுள்ளது. 30 வயதான பிரெஞ்சு-ஜப்பானிய நபர் அதன் உரிமையாளர் ஆவார்.

அவர், கைக்கடிகாரத்தின் மதிப்பு சுமார் 8 லட்சம் யூரோக்கள் என்றும், Richard Mille எனும் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டது என்றும் பொலிசாரிடம் புகார் அளித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து இதுதொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர். அப்போது பெரும் திருப்பமாக, திருடப்பட்டதாக கூறப்பட்ட கைக்கடிகாரம் போலியானது என தெரியவந்துள்ளது.

ஆனால், அது உண்மையான கடிகாரம் என்று தான் குறித்த நபர் எண்ணியிருந்துள்ளார். இந்நிலையில், போலியான கைக்கடிகாரம் என்று தெரிய வந்துள்ளதால், புதிய கோணத்தில் பொலிசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 − twelve =

*