;
Athirady Tamil News

வவுனியாவில் பொதுஜன முன்னணியின் வன்னி தேர்தல் காரியாலயம்!! (படங்கள்)

0

வவுனியா இரட்டைபெரியகுளத்தில் பொதுஜன முன்னணியின் வன்னி தேர்தல் தலைமை காரியாலயம் நாமல் ராஜபக்சவினால் இன்று (18) திறந்து வைக்கப்பட்டது.
வவுனியா சிங்கள பிரதேசசபையின் பிரதி தவிசாளர் வசந்த ராஜ கருணா தலைமையில் பொதுஜன முன்னணியின் தேர்தல் காரியாலயம் திறந்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில் பொதுஜன முன்னணியின் சார்பாக பிரபா கணேசன், சிறிரெலோ கட்சியின் செயலாளர் ச.உதயராஜா, முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் செனவிரத்தின, முன்னாள் வடக்குமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே, ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 + seventeen =

*