;
Athirady Tamil News

உரம் விலை தெரியாத எதிர்க்கட்சி வேட்பாளர்!!

0

நட்டத்தில் இயங்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு பொதுமக்களின் கோடிக்கணக்கான பணம் வழங்கப்படுவதாகவும், குறித்த பணத்தை கொண்டு பொதுமக்களுக்கு இலவசமாக உரத்தை பெற்றுக் கொடுக்க முடியும் எனவும், அது ஒரு குற்றமா என்றும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தான் அதிகாரத்திற்கு வந்த பின்னர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கான சலுகைகள் குறைக்கப்பட்டு குறித்த பணத்தை பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் அவர் தெரிவித்தார்.

சிலர் தனது வாக்குறுதிகள் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக மேற்கொள்ளப்படுபவை என்று கூறினாலும், அது அப்படி இல்லை என அமைச்சர் கூறினார்.

அனுராதபுரம், மிகிந்தலை நகரில் இன்று (18) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர், தனது அரசாங்கத்தின் கீழ் இலவசமாக உரம் பெற்றுக் கொடுக்கப்படும் என மீண்டும் ஒருமுறை தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுக்கப்படும் உரத்தின் விலை தொடர்பில் தெரியாத எதிர்க்கட்சி வேட்பாளர், நெல் விவசாயிகளுக்கு இலவசமாக உரத்தை பெற்றுக் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

உரம் தொடர்பில் பொய்யான தகவல்களை வௌியிடும் முன்னர் உர மானியம் தொடர்பில் அவர் கற்க வேண்டும் எனவும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 + 19 =

*