;
Athirady Tamil News

TNA யோசனைகளுக்கு சஜித் இணங்கியுள்ளார்?

0

தமிழ் தேசிய கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளுக்கு சஜித் பிரேமதாச இணங்கியுள்ளாரா என்பது தொடர்பில் உடனடியாக நாட்டுக்கு வௌிப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளுக்கு சஜித் பிரேமதாச முன்பே இணங்கியிருந்ததாகவும், எனினும் இரு கட்சிகளுக்கும் குறித்த யோசனை சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் கருத்து பொய்யானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் நேற்று (17) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் யோசனைகளுக்கு கோட்டாபய ராஜபக்ஷ ஒருபோதும் இணக்கம் தெரிவிக்கப் போவதில்லை என தெரிவித்த அவர், ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச குறித்த யோசனைகளுக்கு இணங்கியுள்ளதை உடனடியாக நாட்டுக்கு வௌிப்படுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த யோசனைகளில் குறிப்பிட்டுள்ளது படி வடக்கு கிழக்கினை இணைப்பதானால் பொது வாக்கெடுப்பு ஒன்றுக்கு செல்ல வேண்டும் என அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ளதாகவும், வடக்கு கிழக்கு இணைக்கப்படுமாயின் அதன் காரணமாக முஸ்லிம் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 5 =

*