;
Athirady Tamil News

அபிவிருத்தி பணிகளை மதிப்பீடு செய்ய சுயாதீன ஆணைக்குழு !!

0

பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை ரீதியான வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் வியாபாரங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டின் மூலம் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி பணிகளை அங்கிகரிப்பதற்கும் அதனை மதிப்பீடு செய்வதற்கும் சுயாதீன ஆணைக்குழு நியமிக்கப்படும் என தகவல் தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த சுயாதீன ஆணைக்குழுவை நியமிப்பது குறித்து ஆய்வு செய்வதற்கும், அது குறித்த சட்டமூலத்தை தயாரிப்பதற்கும் அதன் பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கும், இலங்கையின் தேசிய மதிப்பீட்டுத் திறனை உறுதி செய்வதற்கும் பாராளுமன்றத் விசேட தெரிவுகுழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

அதற்மைய குறித்த சட்டமூலத்தை தயாரிக்கும் பணிகள் 80 வீதம் பூர்த்தி அடைந்துள்ளதாகவும் அதனை அமைச்சரவையில் சமர்பித்து விரைவாக அனுமதியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த தெரிவுக்குழுவின் தலைவரும், பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

எனவே, இவ்வாறு முன்மொழியப்படும் சட்டமூலத்தின் ஊடாக எந்தவொரு நிறுவனத்திடமிருந்தும் பொருத்தமான தகவல்களைப் பெறவும் அவற்றை மதிப்பீடு செய்யவும் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்படும் எனவும் ஆணைக்குழு சுயாதீன இயங்க வேண்டியது அவசியம் எனவும் அவ்வாறு இருந்தால் மாத்திரமே மதிப்பீடுகளை மேற்கொள்ள முடியும் எனவும் பிரதி சபாநாயகர் கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தில் தயாரிக்கப்படும் கொள்கைகள் மற்றும் பாராளுமன்றத்தினால் ஒதுக்கப்படும் நிதியின் மூலம் செயற்படும் வியாபார செயற்பாடுகள் அனைத்தும் உரியவகையில் நடைபெறுகின்றதா என்பதை அங்கிகரிப்பதற்கும் அதனை மதிப்பீடு செய்வதற்கும் குறித்த சுயாதீன ஆணைக்குழு அமைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, உரிய திட்டங்கள் சரியான நேரத்தில் மற்றும் சரியான முறையில் செயற்படுத்தப்படுவது, அதனூடாக பொது மக்கள் பயனடைவதையும் உறுதி செய்ய இந்த ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கும் என்பது குறிப்பிடதக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × three =

*