பசுக்கள் மீதான அரசாங்கத்தின் பாசம் வெறும் ஏட்டுச்சுரைக்காய் – ப.சிதம்பரம் தாக்கு..!!

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் குடும்பத்தார் மூலமாக தினந்தோறும் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்.
நாட்டின் பொருளாதாரம் பற்றி தினமும் இரு கருத்துகளை பதிவிடுவேன். மக்கள் அவரவர்கள் மனநிலைக்கு ஏற்ப புரிந்து கொள்ளட்டும் என ப.சிதம்பரம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கால்நடைகளின் இனப்பெருக்கம் 6 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளதாக இன்று டுவிட்டரில் குறிப்பிட்ட மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரம், பசுக்கள் மீதான மத்திய அரசின் அன்பு ஏட்டளவில் மட்டுமே இருப்பதாகவும் கால்நடைகளின் இனப்பெருக்கம் மற்றும் உற்பத்தியில் அரசின் அக்கறையின்மையை இது சுட்டிக்காட்டுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
இதேபோல், மற்றொரு பதிவில், தற்போது நாட்டில் வேலைவாய்ப்பு நிலவரம் தொடர்பான கேள்விக்கு 50 சதவீதம் மக்கள் மோசமாக உள்ளதாகவும் 30 சதவீதம் பேர் மேலும் மோசமடையும் என்றும் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் வேலைவாய்ப்பின்மை மிகவும் கடினமாக உள்ளதை புரிந்துக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.