;
Athirady Tamil News

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பிரச்சார கூட்டம் இடைநிறுத்தப்பட்டது.!! (படங்கள்)

0

வவுனியா தாலிக்குளம் பகுதியில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டம் இன்றயதினம்
காலை இடம்பெற்றிருந்தது.குறித்த கூட்டத்தில் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்துகொண்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த கூட்டம் இடம்பெற்றுகொண்டிருந்த நிலையில் வவுனியா மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் இருந்து வருகை தந்த உத்தியோகத்தர்கள் பிரச்சாரகூட்டத்தினை இடைநிறுத்துமாறு தெரிவித்தனர்.

குறித்த பிரச்சார கூட்டத்திற்கு தேர்தல் திணைக்களத்திடம் இருந்து உரிய முறையில் அனுமதி பெறப்படவில்லை என தெரிவித்தே கூட்டம் இடை நிறுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த கூட்டம் இடை நடுவில் நிறுத்தப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் டக்களஸ் தேவானந்தா உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் மீண்டும் திரும்பிச்சென்றிருந்தனர்.இதனால் சற்று நேரம் குழப்பநிலை ஏற்பட்டிருந்தது.

வேறு ஓரு பிரச்சார கூட்டத்திற்கு செல்ல இருந்த நிலையில் ஆதரவாளர்கள் விரும்பியமையால் இங்கு வந்துகலந்துகொண்டேன். சட்டரீதியான அனுமதி பேறாதமையினால்இந்த கூட்டத்தை தொடர்ந்து நடாத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பிறிதொரு நாள் உங்களை சந்திப்பதாக டக்ளஸ் தேவானந்தா இதன்போது பொதுமக்களிடத்தில் தெரிவித்திருந்தார்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 + 5 =

*