;
Athirady Tamil News

கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை!!

0

தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை பல வழிகளிலும் முன்னெடுத்து இன ரீதியான பிரச்சினைகளைத் தோற்றுவித்ததுதம் ஆயுதப் போராட்டம் ஆரம்பமாவதற்கும் காரணமாக இருந்ததே ஐக்கிய தேசியக் கட்சி தான். அந்தக் கட்சிக்கு ஆதரவை வெளிப்படுத்தி வருகின்ற தமிழ்த் தலைமைகள் சாதித்தவை என்ன என வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே கேள்வியெழுப்பியுள்ளார்.

அதே வேளையில் யுத்தத்தை வழிநடத்தி வெற்றி பெற்றது தானே எனக் கூறிவருகின்ற சரத் பொன்சேகாவிற்கு வாக்களிக்க முடியுமென்றால் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஏன் வாக்களிக்க முடியாது எனவும் தமிழ் மக்கள் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு பயப்படத் தேவையில்லை என்றும் உண்மையில் அப்படிப் பயப்படுவதானால் சரத் பொன்சேகாவைப் பார்த்தே பயப்பட வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.

யாழ்.கே.கே.எஸ் வீதியின் சிவலிங்கப்புளியடிச் சந்தியில் அமைந்துள்ள பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இன்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஐனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வெற்றியைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் வட மாகாணத்தில் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றோம். அதிலும் சரித்திரத்தில் முதற்தடவையாக தமிழ்க் கட்சிகளும் முன்னர் ஆயுத இயங்கங்களாக இருந்த ஆயுதக் கட்சிகளும் பலவும் தமது ஆதரவை கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தெரிவித்துள்ளன.

இவ்வாறு நாம் அனைவருமாக மக்களிடம் சென்று பிரச்சாரங்களை முன்னெடுக்கின்ற போது தமிழ்த் தலைமைகள் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் கடும் அதிருப்தியை மக்கள் வெளிப்படுத்தியிருக்கின்றனர். ஏனெனில் நம்பி வாக்களித்த கூட்டமைப்பு இன்றைக்கு தமக்காக எதனையும் செய்யவில்லை என்றும் அவர்கள் தமது பதவிகளுக்காகவும் சலுகைகளுக்காகவுமே அரசுடன் இணைந்து செயற்படுவதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர். இவ்வாறான நிலையில் தேர்தல் தொடர்பில் இன்னமும் தமது முடிவை கூட்டமைப்பு அறிவிக்கவில்லை. அவர்கள் தாமும் குழம்பி மக்களையும் குழப்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் மக்கள் தாம் நம்பி ஏமாந்துவிட்டோம் என்ற ஆதங்கத்தில் இருக்கின்றனர்.

ஆகவே கூட்டமைப்பும் சரி தமிழ் மக்களும் சரி சிந்தித்து நல்லதொரு முடிவை எடுக்க வேண்டும். அந்த முடிவினூடாக எமது வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை வெற்றி பெறச் செய்ய வேண்டும். எமது வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தனக்கு ஆதரவை வழங்குமாறு தமிழ் மக்களிடம் கோரியுள்ளார். கோபம் விரோதம் இல்லாமல் இந்தப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய வேண்டுமென சொல்லியிருக்கின்றார். அத்தோடு தமிழ் மக்கள் எதிர்நோக்கி வருகின்ற பல பிரச்சனைகள் தொடர்பிலும் தீர்வை முன்வைப்பதாகவும் கூறியிருக்கின்றார்.

ஆகவே சிலரின் பதவிகளுக்காகவும் தமது சுயலாபகங்களுக்காகவும் மக்களை ஏமாற்றுவதை விடுத்து மக்கள் பிரச்சனைகளைத் தீர்க்க எண்ணியிருக்கின்ற எமது வேட்பாளருக்கு தமிழ் மக்கள் ஆதரவை வழங்க வேண்டும். அவ்வாறு தமிழ் மக்கள் ஆதரவை வழங்கி எமது வேட்பாளர் வெற்றி பெற்றால் அது தமிழ் மக்களுக்கே நன்மையாக அமையும். ஆதனை தமிழ் மக்களும் செய்வார்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

மேலும் காணாமற்போனோர் விவகாரம் தொடர்பில் பேசப்படுகிறது. அவ்வாறு காணாமற்பொனொர் என்பது வடக்கு கிழக்கு மட்முமல்ல இலங்கை முழுவதுமே காணாமற்போயிருக்கின்றனர். நாட்டில் ஏற்பட்ட நிலைமைகளாலும் இயக்கங்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல்களாலும் பலரும் காணாமல் போயிருக்கின்றனர். ஆகவே காணமற்போனவர்கள் என்பது இன ரீதியான பிரச்சனை அல்ல. அது முழு நாட்டிலுமே உள்ள பொதுப் பிரச்சனையாகவே பார்க்கிறோம்.

ஆகவே தான் காணாமற்போனொர் விவகாரம். அரசியல் கைதிகள் விவகாரம், காணி விடுவிப்பு போன்ற விடயங்களை பொதுப் பிரச்சனையாக அனுகி அதற்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென மஹிந்த, கோட்டா, பசில் ராஜபக்ஷ ஆகியோர் தெரிவித்திருக்கின்றனர். எனவே இவற்றுக்கான தீர்வைக் கொள்வதற்கான சந்தர்ப்பம் இப்போது தமிழ் மக்களுக்கு வந்திருப்பதால் அதனைச் சரியாகப் பயன்படுத்த வேண்டுமென்று நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்.

இவ்வாறான நிலையில் தமிழ் மக்கள் சிந்தித்துச் செயற்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. ஏனெனில் தமிழ் மக்களின் தலைமைகளாக இருக்கின்ற கூட்டமைப்பினர் மக்களின் நலன்சார்ந்து முடிவுகளை எடுப்பதில்லை. அவர்கள் தமது பதவிகளைத் தக்க வைப்பதற்காகவே முடிவுகளை எடுத்திருக்கின்றனர்.

ஆகவே எதிர்காலத்திலாவது தமிழ் மக்களின் பிரச்சனைத் தீர்க்க வேண்டுமாக இருந்தால் தற்போது கிடைத்திருக்கின்ற இந்தச் சந்தர்ப்பத்திலாவது தங்கள்எ பதவிகளைத் தக்க வைக்கபதற்கான முடிவாக அல்லாமல் தமிழ் மக்களின் நலன்சார்ந்த முடிவாக எடுக்க வேண்டும்.

குறிப்பாக கடந்த ஐந்து வருட கால ஐக்கிய தேசியக் கட்சிக்கு தொடர்ந்தும் ஆதரவை வழங்கி வந்த கூட்டமைப்பு சாதித்தது என்ன, தமிழ் மக்களுக்கு எதனைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றனர். இவ்வாறு ஆதரவை வழங்கியதால் மக்களுக்கு ஏதும் பலன் கிடைத்துள்ளதா. உண்மையிலையே அவர்கள் தாங்கள் பதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கும் தங்கள் பதவிகளைப் பாதுகாத்துக் கொள்வதற்குமாகவே செயற்பட்டிருக்கின்றனர்.

கூட்டமைப்பு ஆதரவை வழங்கி வருகின்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகளையும் கூட்டமைப்பின் பதவி மோக செயற்பாடுகளையும் மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். இந்த நாட்டில் இன ரீதியான பிரச்சனை ஏற்படுவதற்கும் ஆயுதப் போராட்டம் ஆரம்பிப்தற்கும் காரணமாக இருந்ததே இந்த ஐக்கிய தேசியக் கட்சி தான். அந்தக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் தான் தமிழ் மக்களின் சொத்தான யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. வாக்குப் பெட்டிகள் திருடப்பட்டன, இன ரீதியான கலவரங்கள் ஏற்படுத்தப்பட்டன, வாக்குரியை பறித்தது என தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆகவே மீளவும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவை வழங்குவதாக மடிவெடுப்பதற்கு முன்னர் இவை தொடர்பில் சிந்திக்க வேண்டியது அவசியமானது. இதே வேளையில் கோத்தபாய தொடர்பில் மக்கள் மக்கத்தியில் பல்வேறான கதைகள் பரப்பப்டுகின்றன. குறிப்பாக அரசியல் தலைவர்கள் தான் கோத்தபாய குறித்து மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகின்றனர். ஆனால் இன்றைக்கு நடக்கின்ற விடயங்களைப் பார்த்தால் அனைத்ததையும் அனைவரும் விளங்கிக் கொள்ள முடியும்.

யுத்தத்தை ஆரம்பித்து வழிநடத்தியதும் யுத்தத்தை வென்றதும் தானே என முன்னாள் இரானுவத் தளபதி சரத் பொன்சேகா கூறுகின்றார். ஆனால் அவருக்க்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமென்று தமிழ்த் தலைமைகள் கோரியதன் அடிப்படையில் மக்களும் வாக்களித்தனர். ஆகவே யுத்தம் காரணமாக கோட்டாபய ராஜபக்ஷவிற்கு மக்கள் பயப்படத் தேவையில்லை. உண்மையில் மக்கள் பயப்பட வேண்டுமென்றால் யுத்தத்தை தானே வழிநடத்தி தானே வென்றதாகக் கூறுகின்ற சரத் பொன்சேகாவிற்குத் தான்.

ஆகவே இந்தச் சரத் பொன்சேகாவிற்கு தமிழ் மக்கள் வாக்களிக்க முடியுமென்றால் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் வாக்களிக்க முடியும். மேலும் கோட்டாபய ராஜபக்ஷ இராணுவத்தைச் சேர்ந்தவராக முன்னர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தால் ஆனால் இன்றைக்கு அவர் அரசியல்வாதியாக வருகின்றார்.

ஆகவே இரானுவம் போன்று அரசியல்வாதி செயற்பட முடியாது. எனவே கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை. அவரை நம்பி வாக்களியுங்கள் எனவும் கேட்டுக் கொண்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen + eight =

*