;
Athirady Tamil News

மோச­டி­யற்ற தேர்­த­லாக இம்­முறை ஜனா­தி­பதித் தேர்தல் அமையும்!!

0

ஜன­நா­யகம் மிக்க ஊழல், மோச­டி­யற்ற தேர்­த­லாக இம்­முறை ஜனா­தி­பதித் தேர்தல் அமையும். இதற்­கான உத்­த­ர­வா­தத்தை என்னால் வழங்க முடியும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார்.

இலங்­கைக்கு சுற்றுப் பய­ண­மொன்றை மேற்­கொண்­டுள்ள நெதர்­லாந்து வெளி­நாட்­ட­லு­வல்கள் அமைச்சர், சனிக்­கி­ழமை ஜனா­தி­ப­தியின் உத்­தி­யோ­க­பூர்வஇல்­லத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்­த­போதே இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

பல்­வேறு சவால்­க­ளுக்கு மத்­தி­யிலும் சுதந்­திரம், ஜன­நா­ய­க­மிக்க தேர்தல் முறை­மையை தொடர்ச்­சி­யாக பேணி வரு­வது தொடர்பில் ஜன­நா­யக நாடுகள் இலங்­கையை பாராட்­டி­யுள்­ள­தாக நெதர்­லாந்து வெளி­நாட்­ட­லு­வல்கள் அமைச்சர் ஸ்டெவ் புளொக் தெரி­வித்­துள்ளார்.

இந்த சந்­திப்பின் போது இலங்­கைக்கும் நெதர்­லாந்­துக்­கு­மி­டை­யி­லான இரு­த­ரப்பு மற்றும் பிராந்­திய செயற்­பா­டுகள் தொடர்பில் விரி­வாக கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.

இம்­முறை இடம்­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதி தேர்­தலின் போது கட்சி சார்­பின்றி தான் செயற்­ப­டப்­போ­வ­தாக தெரி­வித்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, இந்த தேர்தல் அமை­தி­யான ஜன­நா­யகம் மிக்க, ஊழல், மோச­டி­யற்ற தேர்­த­லாக அமை­வ­தற்கு தன்னால் உத்­த­ர­வா­த­ம­ளிக்க முடி­யு­மெ­னவும் தெரி­வித்­துள்ளார்.

பொலிஸ் மற்றும் முப்­ப­டைகள் தனது கட்­டுப்­பாட்டின் கீழ் இருப்­பதால் தேர்தல் காலங்­களில் நாட்டில் சட்­டத்­தையும் ஒழுங்­கையும் பாது­காத்து பக்­கச்­சார்­பற்ற சுயா­தீ­ன­மான தேர்தல் ஒன்றை நடத்­து­வ­தற்கு அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­டு­மாறு பொலிஸ் துறை­யி­ன­ருக்கும் முப்­ப­டை­யி­ன­ருக்கும் பணிப்­புரை விடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ளார்.

இலங்­கையின் அபி­வி­ருத்தி செயற்­பா­டு­க­ளின்­போது குறிப்­பாக நெடுஞ்­சா­லைகள் அபி­வி­ருத்தி, நீர் மாச­டை­தலை தடுப்­ப­தற்­கான செயற்­திட்­டங்கள், கிரா­மிய ரீதியில் முன்­னெ­டுக்­கப்­படும் பாலங்­களை நிர்­மா­ணிக்கும் வேலைத்­திட்­டங்­க­ளுக்­காக நெதர்­லாந்து அர­சாங்கம் இலங்­கைக்கு வழங்­கி­வரும் தொடர்ச்­சி­யான ஒத்­து­ழைப்பை பாராட்­டிய ஜனா­தி­பதி, அண்­மையில் பொலன்­ன­று­வையில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட சில வேலைத்­திட்­டங்­க­ளுக்கு நெதர்­லாந்து அர­சாங்­கத்­தினால் வழங்­கப்­பட்ட உத­வி­க­ளையும் நினைவு கூர்ந்தார்.

இலங்­கையின் திரவ பால் உற்­பத்­தியை மேம்­ப­டுத்­து­வ­தற்கு அத்­துறை தொடர்பில் நிபு­ணத்­து­வ­மு­டைய நெதர்­லாந்தின் பங்­க­ளிப்பை மென்­மேலும் பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் தனது அனுதாபத்தை தெரிவித்த நெதர்லாந்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகளின்போது சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் தேவை தொடர்பாகவும் கருத்து வெளியிட்டுள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × two =

*