;
Athirady Tamil News

உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­குதல் : விசா­ரிப்பதற்கு ஆணைக்­குழு!!

0

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தின குண்­டுத்­தாக்­குதல் தொடர்பில் சுயா­தீன விசா­ர­ணை­களை மேற்­கொள்ள ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­குழு அமைக்­கப்­ப டும். தேசிய பாது­காப்­பினை பலப்­ப­டுத்த வேண்­டு­மாயின் பல­வீ­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள உயிர்த்த பாது­காப்பு சார் விட­யங்கள் அனைத்தும் ஆரம்­பத்தில் இருந்து புதுப்­பிக்­கப்­பட வேண்டும் என்று ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.

நீர்­கொழும் நகரில் நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை இரவு இடம் பெற்ற பொது­ஜன பெர­மு­னவின் தேர்தல் பிரச்­சாரக் கூட்­டத்தில் கலந்­து­கொண்டு கருத்­து­ரைக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இங்கு அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்,

தேசிய பாது­காப்பும், தேசிய பொரு­ளா­தா­ரமும் இன்று கேள்­விக்­கு­றி­யாக்­கப்­பட்­டுள்­ளது. இதற்கு அர­சாங்கம் குறிப்­பிடும் கார­ணிகள் ஏற்­பு­டை­ய­தல்ல. ஆட்­சி­ய­மைத்­த­வுடன் இவ்­வி­ரண்­டையும் முதலில் சீர்­செய்ய வேண்­டிய தேவை காணப்­ப­டு­கின்­றது. 30வருட கால சிவில் யுத்த வேளை­யிலும் கூட தேசிய பாது­காப்பு அர­சியல் மற்றும் சர்­வ­தேச தேவை­களை கருத்திற் கொண்டு பல­வீ­னப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. இதன் கார­ண­மா­கவே கடந்த அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்து இரண்­டரை வருட காலத்­திற்குள் யுத்­தத்தை முடி­விற்கு கொண்டு வந்­தது.

யுத்தம் முடி­விற்கு கொண்டு வந்­ததன் பிறகு தேசிய பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வது அர­சாங்­கத்­திற்கு பாரிய சவா­லாக காணப்­பட்­டது. தேசிய உற்­பத்­தி­க­ளையும் முறை­யான வெளி­நாட்டு உத­வி­க­ளையும் கொண்டு துரி­த­ம­தன முறையில் பொரு­ளா­தார அபி­வி­ருத்­தி­களை முன்­னெ­டுத்தோம். மறு­புறம் யுத்தம் முடி­விற்கு கொண்டு வந்து விட்டோம் என்று தேசிய பாது­காப்­பினை அலட்­சி­யப்­ப­டுத்­தாமல் எந்­நே­ரமும் தேசிய பாது­காப்பில் விழிப்­பு­டனும், பொறுப்­பு­டனும் செயற்­பட்­ட­மை­யி­னாலே 10வரு காலத்தில் நாட்டில் எப்­பி­ர­தே­சத்­திலும் தீவி­ர­வாத செயற்­பா­டுகள் தலை­தூக்­க­வில்லை.

உலக அர­சு­களில் மாறுப்­பட்ட கட்­சிகள் ஆட்­சிக்கு வரும். ஆனால் அந்த அர­சுகள் எப்­போதும் தேசிய பாது­காப்­பிற்கு முக்­கி­யத்­துவம் கொடுக்கும் . எமது நாட்டில் இது மாறுப்­பட்டு காணப்­பட்­டது. 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்­பட்­டதை தொடர்ந்து அர­சாங்­கத்தின் நோக்கம் குறு­கிய நிலைப்­பாட்­டுக்குள் கொண்டு வரப்­பட்­டது. அர­சியல் தேவை­க­ளுக்­காக புல­னாய்வு பிரி­வி­னரும், இரா­ணு­வத்­தி­னரும் பயன்­ப­டுத்­தப்­பட்­டார்கள். இதனை அடிப்­ப­டை­வா­திகள் தமக்கு சாத­க­மாக பயன்­ப­டுத்திக் கொண்டு நாட்­டுக்குள் மீண்டும் தீவி­ர­வா­தத்தை குறு­கிய நேரத்­திற்குள் செயற்­ப­டுத்தி வெற்­றி­ய­டைந்­துள்­ளார்கள்.

ஏப்ரல் 21 ஈஸ்டர் தின குண்­டுத்­தாக்­குதல் தற்­போது மறக்­க­டிக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் அந்த தாக்­கு­தலில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நியாயம் வழங்­கப்­ப­ட­வில்லை. அமைக்­கப்­பட்­டுள்ள விசா­ரணை ஆணைக்­கு­ழுக்­களின் விசா­ர­ணை­களின் மீது மதத் தலை­வர்­களும், பொது மக்­களும் அதி­ருப்­தி­யினை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளார்கள். எமது அர­சாங்­கத்தில் இத்­தாக்­குதல் தொடர்பில் சுயா­தீன விசா­ரணை முன்­னெ­டுக்­கப்­படும்.

நல்­லாட்சி அர­சாங்­கத்தில் குறைப்­பா­டு­களை ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் ஊடாக வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கம் கிடையாது. தேசிய பாதுகாப்பு விடயத்தில் அரசியல் தேவைகளை ஒருபோதும் முன்னிலைப்படுத்த முடியாது. எமது ஆட்சியில் தேசிய பாதுகாப்பு பலப்படுத்தி அதைதொடர்ந்து முன்னெடுத்து செல்ல வேண்டுமாயின் ஏப்ரல் 21 தின குண்டுத்தாக்குதல் சுயாதீன விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 2 =

*