;
Athirady Tamil News

ஆற்றில் பாய்ந்த விமானத்திற்குள் கைகுழந்தையுடன் சிக்கிய பெண்: கோர விபத்திற்கு முன் நடந்த திக் திக் நிமிடங்கள்..!!

0

அமெரிக்காவில் ஆற்றுக்குள் பாய்ந்த விமானத்தில் கைகுழந்தையுடன் பயணித்த பெண், தான் அனுபவித்த திக் திக் நிமிடங்களை பகிர்ந்துள்ளார்.

அக்டோபர் 17ம் திகதி Aleutian தீவில் உள்ள Unalaska விமான நிலையத்தில் PenAir விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகி அருகிலிருந்து ஆற்றுக்குள் பாய்ந்தது.

விபத்தில் சிக்கிய பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக அச்சமயத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், விமானத்தில் 13 மாத பெண் கைகுழந்தை Frankie Quinn உடன் பயணித்த Unalaska-வைச் சேர்ந்த கோடி லீ கூறுகையில், இது எனது வாழ்வில் மறக்க முடியாத சம்பவம், இது முற்றிலும் திகிலூட்டும் வகையில் இருந்தது.

நான் உண்மையில் விமான கொந்தளிப்புக்கு பயந்தேன், என் குழந்தையை இறுக்கமாக பிடித்துக்கொண்டிருந்தேன். முதலில் விமானி தரையிறங்க முயற்சி செய்து மீண்டும் பறந்தார். பின்னர் ஓடு பாதையின் வேறு திசையில் இருந்து தரையிறக்குவார் என கருதினேன்.

ஆனால், அவர் மீண்டும் அதே திசையில் தரையிறக்கினார். மகளை எனது உடலைப் பயன்படுத்தி காப்பாற்றுவது எனது நோக்கம். பின்னர், மிக பயங்கர சத்தம் கேட்டது. விமானத்திற்குள் இருந்த சூட்கேஸுகள் பயணிகள் மேல் விழுந்தது

ஓடு பாதையின் விளிம்பிற்கு சென்ற விமானம், ஆற்றுக்கு மேல் தொங்கியது, அனைவரும் என்னை உடனே வெளியேறும் படி கத்தினர். நாம் தண்ணீருக்குள் இருக்கிறோம், குழந்தையுடன் வெளியேறுங்கள் என எனக்கு அருகில் இருந்த குழந்தை கூச்சலிட்டது.

சில நொடிகளில் நான் விமானத்திலிருந்து வெளியேறினேன். அனைவரும் சிறப்பாக செயல்பட்டு பயணிகளை மீட்டனர். எனக்கு முன் இருக்கையில இருந்த 38 வயதான David Allan Oltman என்ற நபர் உயிரிழந்துவிட்டதாக கூறினார்.

அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல் என லீ தெரிவித்தார். விபத்தில் ஏற்பட்ட பலத்த காயத்தினால் David Allan Oltman உயிரிழந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × one =

*