;
Athirady Tamil News

ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது!!

0

வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொலன்னாவ பகுதியில் ஹெரோயினுடன் நபர் ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து 1 கிலோ 107 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

நேற்று (21) இரவு 9.20 மணியளவில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வெல்லம்பிட்டிய, வென்னவத்த பகுதியை சேர்ந்த 24 வயதுடைய மொஹமட் சராஸ் எனும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − 15 =

*