;
Athirady Tamil News

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு – ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்..!!

0

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. கடந்த ஆகஸ்டு மாதம் 21-ம் தேதி கைது செய்தது. அவரை சிபிஐ அதிகாரிகள் காவலில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ப.சிதம்பரம் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் சிபிஐ நீதிமன்றம் மற்றும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டன. ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது சி.பி.ஐ. பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

அதன்படி சிபிஐ பதில் மனு தாக்கல் செய்தது. சிபிஐ தாக்கல் செய்த மனுவில், ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தது. அதன்பின்னர் ஜாமீன் மனு மீது தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், இன்று ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உச்ச நீதிமன்றம்

ரூ.1 லட்சம் பிணைத் தொகை செலுத்தி ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், ப.சிதம்பரம் வெளிநாடு செல்லக்கூடாது, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் உள்ளிட்ட சில நிபந்தனைகளையும் நீதிபதிகள் விதித்தனர்.

இதற்கிடையே ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கிலும் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை, 7 நாள் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். எனவே, சிபிஐ வழக்கில் ஜாமீன் பெற்றாலும் ப.சிதம்பரம் உடனடியாக சிறையில் இருந்து வெளிவர முடியாது.

அமலாக்கத்துறை விசாரணை முடிந்ததும், 24ம் தேதி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். அப்போது உச்ச நீதிமன்றம் அளித்த ஜாமீன் மற்றும் பிணை உத்தரவின் அடிப்படையில், ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கப்படுமா? என்பதை சிபிஐ நீதிமன்றம் முடிவு செய்யும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × one =

*