;
Athirady Tamil News

தேசிய போசாக்கு மாதத்தை முன்னிட்டு அறிவேன் எனது உடல் நிறை குறியீட்டு நிகழ்வு!! (படங்கள்)

0

தேசிய போசாக்கு மாதத்தை முன்னிட்டு அறிவேன் எனது உடல் நிறை குறியீட்டு(BMI) எனும் தொனி பொருளில் நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலத்தில் நிகழ்வு ஒன்று செவ்வாய்க்கிழமை (22) காலை முதல் மதியம் வரை நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி ஜெ.மதன் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிராந்திய தாய் சேய் நல வைத்திய அதிகாரி வைத்தியர் எம். பஸால் மற்றும் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ். ரங்கநாதன் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள், நாவிதன்வெளி கோட்டத்திற்குட்பட்ட 10 பாடசாலைகளின் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பாடசாலை மாணவர்களது போசாக்கான அறிவை மேம்படுத்தும் நோக்குடன் மாணவர்களுக்கு போட்டிப்பரீட்சைகள் வைக்கப்பட்டு பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் எவ்வாறான போசாக்கான உணவுகளை தெரிவுசெய்தல் தொடர்பாக அறிவித்தல்கள் வழங்கப்பட்டதுடன் மாணவர்களுக்கு மாதிரி உணவுகளும் வழங்கப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 + eight =

*