;
Athirady Tamil News

மஹேஷ் சேனாநாயக்க திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதி!!

0

மேஜர் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க திடீர் சுகயீனம் காரணமான இன்று மதியம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (22) காலை பலங்கொட பகுதியில் வைத்து தனது ஆதரவாளர்களை சந்தித்த அவர் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பிலும் கலந்து கொண்டுள்ளார்.

பின்னர் அவர் தங்கியிருந்த விடுதிக்கு சென்றதை அடுத்து அவரை திடீரென வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இதனையடுத்து பலங்கொட வைத்தியசாலைக்கு சென்ற எமது செய்தியாளர், மஹேஷ் சேனாநாயக்க அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளார்.

காய்ச்சல் நிலைமை அதிகரித்ததன் காரணமாக அவர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 2 =

*