;
Athirady Tamil News

திருநெல்வேலி விளையாட்டு கழகத்தினால் வீதியோரங்களில் மரநடுகை!! (படங்கள்)

0

திருநெல்வேலி கலாமன்ற விளையாட்டு கழகத்தினால் கலாசாலை வீதியினை அழகுபடுத்தும் முகமாக வீதியோரங்களில் மரக்கன்றுகள் நாட்டபட்டுள்ளன.

இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் அப்பிரதேச குடியிருப்பாளர் தங்களது வீடுகளிற்கு முன்பாக ஆர்வத்துடன் மரக்கன்றுகளை நாட்டினர்.

இந்த நிகழ்விற்கான நூறு மரக்கன்றுகளை நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் வழங்கிவைத்ததுடன் இன்றைய இந்த நிகழ்விற்கு நல்லூர் பிரதேச சபையின் தவிசாளரும், வட்டார உறுப்பினரும் சம்பவ இடத்திற்கு வருகைதந்து நிகழ்வுகளை சிறப்பித்தனர்.

இந்த விளையாட்டு கழகத்தின் முன்மாதிரியான செயற்பாட்டை அப்பகுதி மக்களும் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளரும் பாராட்டியுள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − 10 =

*