;
Athirady Tamil News

மீண்டும் யுத்தம் இடம்பெறாத வண்ணம் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்!!

0

நாங்கள் செல்லும் இந்த பயணத்தின் இறுதி முடிவு மக்களின் வெற்றியாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி வேட்பாளர் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட நபர் ஒருவர் வெற்றி பெறாமல் அது நாட்டின் வெற்றியாக அமைய வேண்டும் எனவும் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசியலை வெறுத்துப்போய் உள்ள இளைஞர்களுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன், எங்களோடு இணைந்து நாட்டின் பொருளாதாரம், அபிவிருத்தி, கல்வி, போக்குவரத்து என சகல துறைகளிலும் முன்னேற்றம் காண இணையுமாறு.

மேலும், இந்த நாட்டினுள் இன்னுமொரு யுத்தம் இடம்பெறாத வண்ணம் இலங்கையர்களாக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் மஹேஷ் சேனாநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 1 =

*