;
Athirady Tamil News

பல ஜனாதிபதிகள் வழங்காத தீர்வு என்னால் வழங்கப்படும் – சஜித் சூளுரை!!

0

காலி, மாபலகம பகுதியில் நேற்று (03) நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் கலந்து கொண்ட சஜித் பிரேமதாச கருத்து தெரிவித்தார்.

இதன்போது வௌ்ளநீரே மாபலகம பகுதியில் மக்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினை என சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

இதனால் அரசாங்க பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவரை இப்பகுதிக்கு அனுப்பி இங்கு ஏற்படும் வௌ்ளநீர் அபாயத்தை கட்டுப்படுத்த திட்டம் ஒன்றை வகுத்து வருகின்றோம் என குறிப்பிட்டார்.

பல ஜனாதிபதிகளால் இப்பகுதி வௌ்ளநீருக்கு தேட முடியாமல்போன தீர்வு ஒன்றை சஜித் பிரேமதாசவால் 2 மாதங்களுக்குள் தரப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் மிளகு இறக்குமதியை 17 ஆம் திகதியே தடை உங்கள் சிறுபோக பயிர்ச் செய்கையை ஊக்குவித்து உங்கள் வளமான வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கப்போவதாகவும் சஜித் பிரேமதாச கருத்து தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × one =

*