தேசிய ஜனநாயக மக்கள் முன்னனி சஜீத் பிரேமதாசவுக்கு ஆதரவு!!

தேசிய ஜனநாயக மக்கள் முன்னனி சஜீத் பிரேமதாசவுக்கு ஆதரவு : வவுனியாவில் தெரிவிப்பு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு தாம் ஆதரவளிப்பதாக வவுனியாவில் இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போது தேசிய ஜனநாய மக்கள் முன்னணியின் தலைவர் ஆனந்தராஜ் தெரிவித்தார்.
வவுனியா வாடி வீட்டில் இன்று (04.11.2019) மாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது கட்சியின் நிறைவேற்றுக்குழுவின் தீர்மானத்திற்கு அமைவாகவே இவ் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 28.10.2019 அன்று நாம் கொழும்பில் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாச அவர்களுடன் சந்திப்பொன்றினை மேற்கொண்டிருந்தோம். இதன் போது எமது கட்சியின் பூரண ஆதரவிணை சஜீத் பிரேமதாசவுக்கு வழங்கியுள்ளோம். நாங்கள் 25 பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களுடன் அவ் ஆதரவிணை வழங்கியுள்ளதாகவும் 25 கோரிக்கைககள் அடங்கிய புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையோப்பம் இட எந்தவோரு ஆட்சேபனையும் இல்லையேனவும் சஜீத் பிரேமதாச தெரிவித்ததாகவும் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”