;
Athirady Tamil News

வவுனியாவில் மின் துண்டிப்புக்கு சென்ற மின்சார சபையினர் மீது தாக்குதல்!! (படங்கள்)

0

வவுனியாவில் மின் துண்டிப்புக்கு சென்ற மின்சார சபையினர் மீது தாக்குதல்: ஐவர் காயம்

வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் மின் துண்டிப்புக்கு சென்ற மின்சார சபையின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 5 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வாகனம் ஒன்றும் சேதமடைந்துனள்ளது.

வவுனியா, ஆச்சிபுரம், 10 ஆம் ஒழுங்கைப் பகுதியில் மின்சார நிலுவையில் உள்ள வீடுகளின் மின்சாரத் துண்டிப்புக்காக மின்சார சபையினர் சென்றுள்ளளர். இதன்போது குறித்த வீட்டாருக்கும், மின்சார சபையினருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது.

இதனையடுத்து அப்பகுதியில் ஒன்று கூடிய பலர் மிகன்சார சபை வாகனத்தை நகர விடாது தடுத்து நிறுத்தியமையால் குழப்பம் ஏற்பட்டது. இதன்போது மின்சார சபையினர் மீது கம்பிகளால் தாக்கப்பட்டமையால் 5 பேர் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. மின்சார சபை வாகனம் ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த 5 பேரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மின்சார சபையினரால் 119 பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து அங்கு வென்ற வவுனியா பொலிசார் 3 பெண்களை கைது செய்துள்ளதுடன், இது தொடர்பில் மேலும் பலரை தேடி வருகின்ளறனர்.

இதேவேளை, குறித்த பகுதிக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்து இலங்கை மின்சார சபையின் பிராந்திய காரியாலயத்தினை தொடர்பு கொண்ட போது குறித்த பகுதிக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தமையுடன் அதற்கான காரணத்தினை தெரிவிக்க மறுத்து விட்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 4 =

*