;
Athirady Tamil News

TNA வவுனியாவில் மக்களை அலட்சியம் செய்துள்ளனர் – நாமல் ராஜபக்ச!! (படங்கள்)

0

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது பிரச்சினைகளை தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் குறிப்பிட்டு வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நேற்று வவுனியாவில் அந்த மக்களை அலட்சியம் செய்துள்ளனர் என நாமல் ராஜபக்ச தெரிவித்தார். சிறிலங்கா பொது ஜன பெரமுன கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இடம்பெற்றபோது ம்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன கட்சியில் தேர்தல் பிரச்சார கூட்டங்கள் கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இன்று இடம்பெற்றது. இரவு 8 மணியளவில் கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இடம்பெற்ற தெர்தல் பிரச்சார கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்கியுள்ளது. நேற்றய தினம் வவுனியாவில் இடம்பெற்ற கூட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் தாயார் ஒருவர் சம்பந்தன் உள்ளிட்டோரை சந்திக்க கேட்டுள்ளனர்.

அதன்போது அவர்கள் அவர்களின் கருத்திற்கு செவி சாய்க்கவில்லை. அவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளை தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்னிலைப்படுத்தியே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வென்றனர். அவ்வாறு வென்றவர்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு தமது ஆதரவினை வழங்கி எதையும் சாதிக்கவில்லை. இங்குள்ள மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவும் இல்லை. இந்த நிலையில் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சிக்கு தமது ஆதரவினை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வழங்கியுள்ளனர்.

இன்று ஓர் விடய்தை புதிதாக அறிய முடிந்தது. ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் விஞ்ஞர்பனத்தில் தமிழ் மொழியில் ஒரு விதமாகவு்ம, சிங்கள மொழியில் வேறு விதமாகவும் எழுதப்பட்டுள்ளதாக அறிய முடிந்தது. இவர்கள் தமிழ் மக்களிற்கு ஒரு விதமாகவும், சிங்கள மக்களிற்கு இன்னொரு விதமாகவும் காண்பிக்கின்றனர். ஆனால் நாம் அவ்வாறு இல்லை. எம்மால் செய்ய முடியும் என்பதை மாத்திரமே சொல்வோம். முடியாததை முடியாது என்றே சொல்வோம் எனவும் அவர் தெரிவித்தார்.

நிகழ்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் கருத்து தெரிவிக்கையில், நல்லாட்சி அமைக்கப்பட்டு ஐந்து வருடங்களில் ஐந்து தீபாவளிகளும், பொங்கல்களும் கடந்து விட்டது. ஆனால் தீர்வு இன்னும் வரவில்லை. ஒவ்வொரு தடவையும் இந்தா தீர்வு வருகின்றது என கூறி கூறி மக்களை ஏமாற்றிவிட்டனர். தீர்வு வந்து சேரவில்லை. தற்புாது ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்திற்கு மீண்டும் தமது ஆதரவினை தெரிவித்துள்ளனர். இங்குள்ள மக்களிற்கு வேலை வாய்ப்புக்கள் இல்லை.

சம்பந்தன் அவர்கள் சொல்கின்றார், வேலை வாய்ப்பு கேட்டால் தீர்வு தொடர்பில் பேச முடியாது என்று. ஆனால் இன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலும், மின்சார சபையின் மின் வாசிப்பாளர்கள் உள்ளிட்ட பதவி நிலைகளில் சிங்கள ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சிங்கள ஊழியர்கள் நியமிக்கப்பட்டமை தவறென நான் கூறவில்லை. அவ்வாறு எமது மக்களிற்கு வேலை வாய்ப்புக்கள் கிடைக்காது உள்ள நிலையில் எமது பிரதேசத்தில் வேறு இடங்களில் இருந்து வேலைகளிற்காக அமர்த்தப்பட்டுள்ளனர். இன்று தீர்வும் கிடைக்கவில்லை. எமது மக்களிற்கான வேலை வாய்ப்புக்களும் கிடைக்கவில்லை எனவும் அவர் இதன்புாது தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சார கூட்டத்தில் சிறுவர்களின் நடன நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன், நாடாளுமன்ற உறுப்பினருடன் செல்பி படங்களையும் மக்கள் எடுத்துக்கொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve + 3 =

*