;
Athirady Tamil News

ஆப்ரகாம் லிங்கன் அமெரிக்காவின் 16-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார் – நவ.6- 1860..!!!

0

ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் 16-வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாள். குடியரசுக் கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர் இவர்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1632 – 30 ஆண்டு போரில் சுவீடனின் பேரரசர் குஸ்டாவஸ் அடொல்பஸ் கொல்லப்பட்டார். * 1759 – பாளையக்காரர் பூலித்தேவரின் நெற்கட்டான் செவ்வலைக் கோட்டையை இசபல்கான் கான்சாகிப் என்பவனின் படைகள் வெடிகுண்டுகள் கொண்டு தாக்கின. ஆனாலும் கோட்டையைப் பிடிக்க முடியவில்லை. * 1844 – டொமினிக்கன் குடியரசின் முதலாவது அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டது.

* 1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜெபர்சன் டேவிஸ் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புக்குத் தலைவரானார். * 1891 – இலங்கை ஸ்டீம்ஷிப் கம்பெனிக்குச் சொந்தமான நீராவிக் கப்பல் லேடி ஹவ்லொக் முதன் முறையாக கொழும்பு வந்தடைந்தது. * 1913 – தென்னாபிரிக்காவில் மகாத்மா காந்தி இந்திய சுரங்கத் தொழிலாளர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டார். * 1918 – போலந்தில் இரண்டாவது போலந்து குடியரசு அமைக்கப்பட்டது.

* 1935 – எட்வின் ஆம்ஸ்ட்ராங் பண்பலை ஒலிபரப்பு பற்றிய ஆய்வை வெளியிட்டார். * 1941 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் தனது முப்பதாண்டு கால பதவியில் இரண்டாவது தடவையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். ஜெர்மனியின் தாக்குதலில் 3,50,000 சோவியத் வீரர்கள் கொல்லப்பட்டிருந்தாலும், ஜெர்மனியர்கள் தமது 4.5 மில்லியன் பேரை இழந்திருப்பதாகவும் சோவியத் வெற்றி கண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 14 =

*