;
Athirady Tamil News

கொலம்பியாவில் 11 நீதிபதிகள் உள்பட 115 பேர் கொலை செய்யப்பட்ட நாள்: 6-11-1985..!!!

0

1985-ம் ஆண்டு இதே தேதியன்று கொலம்பியாவில் இடதுசாரி தீவிரவாதிகளால் 11 நீதிபதிகள் உள்பட 115 பேர் கொலை செய்யப்பட்டனர்.

இதே நாளில் நடைபெற்ற மேலும் சில முக்கிய நிகழ்வுகள்:-

* 1632 – முப்பதாண்டுப் போரில் சுவீடனின் பேரரசன் குஸ்டாவஸ் அடொல்பஸ் கொல்லப்பட்டான்.
* 1759 – பாளையக்காரர் புலித்தேவரின் நெற்கட்டான் செவ்வலைக் கோட்டையை இசபல்கான் கான்சாகிப் என்பவனின் படைகள் வெடிகுண்டுகள் கொண்டு தாக்கின. ஆனாலும் கோட்டையைப் பிடிக்க முடியவில்லை.
* 1844 – டொமினிக்கன் குடியரசின் முதலாவது அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டது.
* 1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜெபர்சன் டேவிஸ் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புக்குத் தலைவரானார்.
1891 – இலங்கை ஸ்டீம்ஷிப் கம்பெனிக்குச் சொந்தமான நீராவிக் கப்பல் “லேடி ஹவ்லொக்” முதன் முறையாக கொழும்பு வந்தடைந்தது.
* 1913 – தென்னாபிரிக்காவில் மகாத்மா காந்தி இந்திய சுரங்கத் தொழிலாளர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டார்.
* 1918 – போலந்தில் இரண்டாவது போலந்து குடியரசு அமைக்கப்பட்டது.
* 1935 – எட்வின் ஆம்ஸ்ட்ராங் பண்பலை ஒலிபரப்பு பற்றிய ஆய்வை வெளியிட்டார்.
* 1941 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் தனது முப்பதாண்டு கால பதவியில் இரண்டாவது தடவையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். ஜெர்மனியின் தாக்குதலில் 350,000 சோவியத் வீரர்கள் கொல்லப்பட்டிருந்தாலும், ஜெர்மனியர்கள் தமது 4.5 மில்லியன் பேரை இழந்திருப்பதாகவும் சோவியத் வெற்றி கண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
* 1943 – இந்தியாவின் வங்காளத்தில் “நவகாளி”யில் இடம்பெற்ற இந்து- முஸ்லிம் கலவரத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக மகாத்மா காந்தி கல்கத்தாவில் இருந்து நவகாளி வந்து சேர்ந்தார்.
* 1943 – இரண்டாம் உலகப் போர்: ரஷ்யா உக்ரைனின் கீவ் நகரைக் கைப்பற்றினர். ஜெர்மனியினர் நகரை விட்டு விலகும்போது நகரின் பல பகுதிகளை சேதமாக்கினர்.
* 1962 – ஐநா பொதுச்சபை தென்னாபிரிக்காவின் நிறவெறிக் கொள்கையைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றியது.
* 1963 – வியட்நாம் போர்: நவம்பர் 1-ல் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து, இராணுவத் தலைவர் டோங் வான் மின் தெற்கு வியட்நாமின் அதிபரானார்.
* 1965 – ஐக்கிய அமெரிக்காவுக்கு குடியேற விரும்பிய கியூபா நாட்டினரை விமானம் மூலம் அங்கு செல்ல கியூபாவும் ஐக்கிய அமெரிக்காவும் உடன்பட்டன. இதன்படி 1971-ற்குள் 250,000 கியூபர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.
* 1977 – ஐக்கிய அமெரிக்காவின் ஜார்ஜியாவில் அணைக்கட்டு ஒன்று இடிந்ததில் 39 பேர் கொல்லப்பட்டனர்.
1999 – ஆஸ்திரேலியர்கள் அனைத்து மக்கள் வாக்கெடுப்பு மூலம் பிரித்தானிய முடியாட்சியின் கீழ் தொடர்ந்திருக்க சம்மதம் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 2 =

*