;
Athirady Tamil News

ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரேம­தா­சவை ஆத­ரிக்க “புளொட்” தீர்­மானம்!! (படங்கள்)

0

ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரேம­தா­சவை ஆத­ரிக்க “புளொட்” தீர்­மானம் -“புளொட்” தலைவர் தெரிவிப்பு.. ரெலோவின் நிலையென்ன?

புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரேம­தா­சவை ஆத­ரிக்க தமி­ழீழ மக்கள் விடு­தலை கழகம் (புளொட்) தீர்­மானம் எடுத்­துள்­ள­துடன் தமி­ழீழ விடு­தலை இயக்­கத்தின் (ரெலோ) தீர்­மானம் இன்று அறி­விக்­கப்­ப­ட­வுள்­ளது.

இம்­முறை ஜனா­தி­பதி தேர்­தலில் சஜித் பிரே­ம­தா­சவை ஆத­ரிக்க தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பிர­தான கட்­சி­யான இலங்கை தமி­ழ­ரசு கட்சி தீர்­மானம் எடுத்­துள்ள நிலையில் ஏனைய இரண்டு பங்­காளிக் கட்­சி­க­ளான ரெலோ, புளொட் ஆகிய கட்­சி­களின் நிலைப்­பா­டுகள் இன்­னமும் அறி­விக்­கப்­ப­ட­வில்லை.

இது குறித்து தமி­ழீழ விடு­தலை இயக்­கத்தின் (ரெலோ )தலைவர் செல்வம் அடைக்­க­ல­நாதன் கூறு­கையில்,

“நாம் கட்­சி­யாக இன்­னமும் தீர்­மானம் ஒன்­றினை எடுக்­க­வில்லை. நாளைய தினம் (இன்று) எமது கட்­சியின் உறுப்­பி­னர்கள் கூடி எமது நிலைப்­பா­டுகள் குறித்து ஆரா­ய­வுள்ளோம். இலங்கை தமி­ழ­ரசு கட்­சியின் தீர்­மானம் குறித்து நாம் சிந்­திக்க வேண்டும்.

அதேபோல் வெறு­மனே ஒரு வேட்­பா­ளரை வீழ்த்த இன்­னொரு வேட்­பா­ள­ருக்கு அர்த்­த­மற்ற ஆத­ரவை வழங்­கவும் முடி­யாது. நாம் ஒரு ஜனா­தி­பதி வேட்­பா­ளரை ஆத­ரிக்க வேண்டும் என்றால் எமது மக்கள் சார் விட­யங்­களில் முக்­கி­யத்­துவம் கொடுக்க வேண்டும். அவ்­வாறு இல்­லாது ஒரு வேட்­பா­ளரை வெற்­றி­பெற செய்ய எமது மக்­களை ஏமாற்ற முடி­யாது.

சில தீர்­மா­னங்­களில் நாம் உறு­தி­யாக உள்ளோம். எமது நிலைப்­பா­டுகள் குறித்து நாம் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்­த­னுடன் பேசுவோம். எம்­முடன் பேசவும் அவர் தயா­ராக உள்ளார். நாளைய தினம் (இன்று) நாம் எமது தீர்­மா­னத்தை அறி­விப்போம்” என்றார்.

தமி­ழீழ மக்கள் விடு­தலை கழ­கத்தின் (புளொட்) தலைவர் சித்­தார்த்தன் இது குறித்து கூறு­கையில்,

“நாம் ஏற்­க­னவே ஒரு தீர்­மா­னத்தை எடுத்து அதில் உறு­தி­யாக உள்ளோம். இது ஒரு மாதத்­துக்கும் முன்­னமே எடுக்­கப்­பட்ட தீர்­மானம். அதா­வது நாம் இரண்டு பிர­தான வேட்­பா­ளர்­களில் ஒரு­வரை ஆத­ரிப்­பது, அதில் சஜித் பிரே­ம­தா­சவை ஆத­ரிப்­பதே சரி­யான தெரிவு என்­பதை நாம் கூறி­விட்டோம். இப்­போதும் நாம் அந்த தீர்­மா­னத்தில் உறு­தி­யாக உள்ளோம்.

எமது நோக்கம் என்­ன­வெனில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பாக அனைத்து கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து ஒரு வேட்­பா­ள­ருடன் நிற்க வேண்டும் என்­பதே. அதில் எமது தலை­மைகள் தனித்­தனி தீர்­மானம் எடுக்க வேண்­டி­ய­தில்லை. கூட்­ட­மைப்­பாக ஒரு தீர்­மா­னத்தை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தால் இன்­னமும் ஆரோக்­கி­ய­மா­ன­தாக இருந்­தி­ருக்கும். எவ்­வாறு இருப்­பினும் இப்­போதும் நாம் ஒற்­று­மை­யாக தமிழ் மக்­களின் நலன்­களை கவ­னத்தில் கொள்ள வேண்டும் என்­பதே எமது உறு­தி­யான நிலைப்­பா­டாகும்.

ஆத­ரவு விட­யத்தில் பிரதமர் என்னை தொலைபேசியில் அழைத்து பேசினார்.எமது ஆதரவு குறித்து வினவினார். நாம் ஏற்கனவே எடுத்த தீர்மானம் குறித்து அவருக்கு கூறினேன். செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.யின் நிலைப்பாடு குறித்து அவருடன் பேசுவதாக கூறினார்” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × four =

*