;
Athirady Tamil News

கட்டுமரத்தில் சென்று கடலில் மீன்பிடித்து பெற்றோரை காப்பாற்றும் சிறுவன்..!!!

0

திருவனந்தபுரம் அருகே உள்ள பாறசாலை பகுதியை சேர்ந்தவர் பிராங்கிளின். இவரது மனைவி வெல் சிட்டா.

மீன்பிடி தொழிலாளியான பிராங்கிளின் உடல் நலக்குறைவு காரணமாக மீன்பிடிக்க செல்ல முடியவில்லை. இதனால் அவரது குடும்பம் வறுமையில் வாடும் நிலைக்கு தள்ளப்பட்டது.

இந்த தம்பதியின் 14 வயது மகன் பிரசியின் மீது குடும்ப சுமை விழுந்தது. இதனால் அவன் தந்தை செய்த மீன்பிடி தொழிலை செய்து பெற்றோரை காப்பாற்ற முடிவு செய்தான். அதன்படி தினமும் அதிகாலை 5 மணிக்கு எழுந்து கட்டுமரம் மூலம் கடலுக்கு செல்லும் பிரசி, கடலில் கிடைக்கும் மீன்களை கரை திரும்பியதும் விற்று காசாக்குகிறான்.

அதன்பிறகு பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்பும் பிரசி பெற்றோருக்கு தேவையான உதவிகளை செய்துவிட்டு பள்ளிக்கூடத்திற்கு செல்கிறான். அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 9-வது வகுப்பு படிக்கும் பிரசி கடந்த 2 ஆண்டுகளாக கட்டுமரம் மூலம் கடலில் மீன்பிடிக்கும் தொழில் செய்து வருகிறான்.

மழை பெய்தாலும், வெயில் அடித்தாலும் கடலுக்குச் சென்றால்தான் பெற்றோரை காப்பாற்ற முடியும் என்பதால் சிறு வயதிலேயே இந்த கடினமான மீன்பிடி தொழிலை அவன் மேற்கொண்டு வருகிறான். அவனது நிலையை உணர்ந்த அக்கம், பக்கத்தினரும் அவன் பிடித்து வரும் மீனை விலைக்கு வாங்கி அவனுக்கு உதவுகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 + one =

*