;
Athirady Tamil News

கண்ணமங்கலம் அருகே வீட்டில் தனியாக இருந்த ஆசிரியை கொலை..!!!

0

கண்ணமங்கலம் அருகே உள்ள முனியந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் ராயப்பன் மகள் லூர்து மேரி (வயது 59) ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியை. இவரது வீடு வேலூர் திருவண்ணாமலை மெயின் ரோட்டையொட்டி உள்ளது. வீட்டின் அருகே இரு பக்கமும் பெரிய கடைகள் உள்ளன. திருமணம் ஆகாததால் லூர்துமேரி மட்டும் தனியாக வசித்து வந்தார்.

இன்று காலை நீண்ட நேரமாகியும் அவரது வீடு திறக்கவில்லை. சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது லூர்து மேரி உடலில் வெட்டுக் காயங்களுடன் நாற்காலியில் இருந்தபடி இறந்து கிடந்தார்.

மேலும் அவரது வீட்டில் வளர்த்து வந்த நாய் இறந்து கிடந்தது. அதனை மர்ம நபர்கள் அடித்து கொன்று வீட்டின் ஓரத்தில் தூக்கி வீசியுள்ளனர்.

இதைக் கண்டு திடுக்கிட்ட பொதுமக்கள் சந்தவாசல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பொதுமக்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்ளே செல்ல முடியாதபடி வீட்டின் கதவுகளை போலீசார் மூடினர்.

லூர்து மேரியை அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். நாற்காலியில் அமர்ந்த நிலையில் பிணத்தை இருக்க வைத்து விட்டு கொலை கும்பல் தப்பி ஓடிவிட்டனர்.

இந்த செயலில் கொள்ளை கும்பல் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரது வீட்டில் நகை, பணம் ஏதாவது கொள்ளை போனதா? என போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் முன்விரோதம் அல்லது சொத்து தகராறில் இந்த சம்பவம் நடந்ததா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர். இந்த பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 2 =

*