;
Athirady Tamil News

வன்னி தேர்தல் தொகுதியில் தபால் மூலமாக 10 ஆயிரத்து 994 வாக்குகள்!!

0

வன்னி தேர்தல் தொகுதியில் தபால் மூலமாக 10 ஆயிரத்து 994 வாக்குகள் வாக்களிக்கப்பட்டுள்ளது. வவுனியா அரசாங்க அதிபர்!

நடைபெற்ற தபால் மூல வாக்களிப்பில் வன்னி மாவட்ட தேர்தல் தொகுதியில் வாக்கு எண்ணும் பணிகள் நிறைவுற்றுள்ள நிலையில் தபால் மூல வாக்குகள் 10 ஆயிரத்து 994 வாக்களிக்கப்பட்டுள்ளது என வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.ஐ.கனீபா தெரிவித்துள்ளார்.

பெற்றுக்கொள்ளப்பட்ட தபால் மூல வாக்குகள் 12 ஆயிரத்து 184 இதில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்குகள் 10 ஆயிரத்து 994 வாக்குகள், நிராகரிக்கப்பட்ட வாக்குகள் ஆயிரத்து 190, இதுவரை வாக்களிக்கப்பட்ட தாபால் மூல வாக்குகள் 10 ஆயிரத்து 472 வாக்குகள், இதன் அடிப்படையில் 95.25 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் இதுவரை 36 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று ஒவ்வொரு முறைப்பாடுகளுக்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 + 2 =

*