;
Athirady Tamil News

யாழ் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர விவசாய சம்மேளனம் அங்குரார்பணம்!! (படங்கள்)

0

யாழ் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர விவசாய சம்மேளனம் அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டது

வடமாகாணத்தில் உள்ள விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதற்காக வடமாகாணம் வருகைதந்த அகில இலங்கை ஸ்ரீலங்கா சுதந்திர விவசாய சம்மேளன தலைவர், செயலாளர் உள்ளிட்ட பிரதிநிதிகளை முன்னாள் கமதொழில் பிரதியமைச்சர் அங்கஜன் இராமநாதன் ஏற்பாட்டில் நேற்று மாலை குப்பிழான் விவசாய சம்மேளனத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் யாழ் மாவட்ட விவசாய சம்மேளன மற்றும் சங்க தலைவர், பிரதிநிதிகள் மற்றும் யாழ் மாவட்ட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த கலந்துரையாடலில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பிலும் விவசாயத்தில் முன்னேற்றம் காண விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை பற்றியும் மற்றும் இவ் வருடம் விதை உருளைக்கிழங்கு பயிரிடுவோருக்கு அங்கஜன் இராமநாதன் அவர்களால் 3ம் வருடமாக தொடர்ச்சியாக பெற்றுக்கொடுக்கப்படுகின்ற மானியத்திற்கு விவசாயிகளால் நன்றி செலுத்தப்பட்டு அவற்றை வினைத்திறனாக விநியோகம் சம்மந்தமாக கலந்துரையாடப்பட்டது.

ஸ்ரீலங்கா சுதந்திர விவசாய சம்மேளனத்தினால் யாழ் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர விவசாய சம்மேளன தலைவராக அங்கஜன் இராமநாதனை யாழ் விவசாயிகளால் பரிந்துரைக்கப்பட்டு ஏகமனதாக ஏற்றுகொள்ளப்பட்டு யாழ் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர விவசாய சம்மேளனம் அங்குரார்பணம் செய்யப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − 11 =

*