;
Athirady Tamil News

சஜித்தை ஆதரிப்பதற்கான முடிவு பாராளுமன்ற குழு கூட்டதிலேயே எடுக்கப்பட்டது!!சிவமோகன்!!

0

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு முன்னமே தீர்மானம் எடுத்த்திருந்ததாகவும், யாரையும் விட்டு விட்டு தாம் செல்லவில்லை என்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார்.

வவுனியாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்,

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்….

தேர்தல் தொடர்பாக கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு கூட்டம் முன்னம் இடம்பெற்றது.இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சி தலைவர்களும், ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். தமிழரசு கட்சி முடிவினை எடுக்கும் முன்னமே தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு அந்த முடிவை ஏற்கனவே எடுத்திருந்தது.அதனை உடனே அறிவிக்காமல் மற்றய வேட்பாளரும் தனது விஞ்ஞாபனத்தை முன்வைத்த பின்னர் தீர்மானம் எடுப்பதாக இருந்தது.அந்த தீர்மானமும் வந்தது.

அதன்பின்னர் தமிழரசு கட்சி தனது முடிவினை எடுத்தது. எனினும் ஏனைய இரண்டு கட்சிகளுடன் கலந்தாலோசித்த பின்னரே எடுக்கபட்ட தீர்மானத்தின் வரைபை வெளிவிடுவது என்று முடிவினை எடுத்தது. அதன்படி தான் நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம். எவரையும் விட்டு விட்டு நாம் செல்லவில்லை. ஒரு தரப்பு வெல்ல வேணும் என்பதை விட இன்னொரு தரப்பு வெல்ல கூடாது என்பதே எமது மக்களின் எண்ணமாக இருக்கிறது.அதனால் எமது மக்களும் கூட்டமைப்பும் பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளன.

தேர்தலில் வாக்களிக்க கூடாது என்று சொல்பவர்களும் எனக்கு தான் வாக்களிக்க வேண்டும் என்று கூறுபவர்களும், ஏதோ ஒரு விதத்தில் தோற்கடிக்கபடவேண்டியவரை வெல்ல பண்ணலாம் என்ற எண்ணத்தில் இறங்கியதாகவே நாம் கருதுகிறோம். அதில்சிவாஜிலிங்கமும், விதிவிலக்கல்ல. இருக்கும் ஜனநாயக சூழலை குழப்பிய பெயர் அவருக்கு கிடைக்கும். அது தான் அவருக்கு கிடைக்கும் பரிசு.மீண்டும் ஒரு அராஜக ஆட்சி இந்த நாட்டில் உருவாக்கினால் அதற்கான பொறுப்பை சிவாஜி ஏற்க தயாராக வேண்டும். பகிஸ்கரியுங்கள் என்று சொல்பவர்களும் அதை ஏற்க தயாராக வேண்டும்.

இந்த தேர்தலில் தமிழர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். தமிழர்கள் தங்களது வாக்குகள் வீணாகாதவகையில் ஜனநாயக கடமையை சரியாக செய்ய வேண்டும். இங்கு வாக்களிக்க வேண்டாம் என கூறுவோரும் வாக்கு சீட்டை நிராகரிக்கும் வகையில் பாவியுங்கள் என கூறுபவர்களும் சில்லறையாக இருந்துகொண்டு எங்களுக்கு வாக்களியுங்கள் என்பவர்களும் அராஜகத்தனமகவும் வஞ்சகத்தனமாகவும் மக்களை தள்ளி விடுபவர்களாகவே இருப்பார்கள். எனவே மக்கள் இதில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 + eight =

*