;
Athirady Tamil News

சிறுமி இறந்தமைக்கு போக்குவரத்து பொலிசாரின் அசமந்தமமே காரணம்!! (படங்கள்)

0

வவுனியாவில் விபத்தில் சிறுமி இறந்தமைக்கு போக்குவரத்து பொலிசாரின் அசமந்தமமே காரணம்! பொதுமக்கள் குற்றச்சாட்டு!!

வவுனியாவில் டிப்பர் மோதிய விபத்தில் (06) அன்று சிறுமி ஒருவர் உயிரிழந்தமைக்கு போக்குவரத்து பொலிசாரின் அசமந்தமே காரணம் என பொது மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

வவுனியா கொறவப்பொத்தான வீதியில் நீதிமன்றத்துக்கு அருகாமையில் மணல் ஏற்றிவந்த டிப்பர் வாகனம் துவிச்சக்கர வண்டியில் சென்ற தாய் மற்றும் சிறுமியை மோதித்தள்ளியதில் டிப்பர் வாகனத்தின் சில்லுக்குள் சிக்கிய சிறுமி தலை சிதறி சம்பவ இடத்தியேயே உயிரிழந்தார். சம்பவத்தில் தூக்கி வீசப்பட்ட சிறுமியின் தயார் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த பொது மக்கள். வவுனியா போக்குவரத்து பொலிசார், பொறுப்பான விதத்தில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுவதில்லை வவுனியா பொது வைத்தியசாலைக்கு செல்லும் நாற்சந்தியில் நின்று கண்காணிக்கும் பொலிசார் மோட்டார் வண்டியில் பயணிப்பவர்களை நிறுத்தி ஆவணங்களை சோதனை செய்வதுடன் தங்கள் பணிகளை முடித்து கொள்கிறார்கள்.

குறித்த சந்தியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபடும் போக்குவரத்து பொலிசார் 50 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள பேருந்து தரிப்பிடத்தில் தரித்து நிற்கும் உள்ளுர் சேவையில் ஈடுபடும் பேரூந்துகளை ஒழுங்குபடுத்துவதில்லை, அப்பகுதியில் தரித்து நிற்கும் பேரூந்துகளால் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகின்றது என சுட்டிக்காட்டிய பொதுமக்கள் இதன் காரணமாக அப்பகுதியில் ஒலி எழுப்பும் வாகனங்களுக்கு தண்டப்பணம் அறவிடுவதிலேயே பொலிசார் குறியாக இருப்பதாகவும் விசனம் வெளியிட்டனர்.

பாடசாலை நேரங்களில் பயணிக்கும் கனகரக வாகனங்களையோ, மணல் மற்றும் கற்களை ஏற்றிவரும் டிப்பர் வாகனங்களையோ பொலிசார் கவனிப்பதில்லை இலங்கை போக்குவரத்து சட்டத்தின் பிரகாரம் மாலை ஆறுமணிக்கு பின்பே கனகரக வாகனங்கள் நகருக்குள் பிரவேசிக்க முடியும் என்ற சட்டத்தையும் அமுல் படுத்துவதில்லை என குற்றஞ்சாட்டினர்.
விபத்தில் மாலை 3.30 மணிக்கே குறித்த சிறுமி பலியாகியிருந்தார். கற்களை ஏற்றி வந்து விபத்தை ஏற்படுத்திய டிப்பர் வாகனத்தை போக்குவரத்து பொலிசார் எவ்வாறு நகர் பகுதிக்குள் அனுமதித்தனர் என பொது மக்கள் கேள்வி எழுப்பினர்.
அத்துடன் விபத்து நடந்த பகுதியில் பாதசாரிகள் வீதி கடவை இரண்டு அமைக்கப்பட்டுள்ள போதிலும் அப்பகுதியில் போக்குவரத்து பொலிசார் இல்லாத காரணத்தினால் வாகனங்கள் வேகமாக பாதசாரிகள் கடவையில் நிறுத்தாமல் பயணிப்பதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

வவுனியா நகருக்குள் கனகரக வாகனங்களை அனுமதிக்கும் நேரத்தை மட்டுப்படுத்தி, கொறவப்பொத்தான வீதியில் தரித்து நிற்கும் தனியார் பேரூந்துகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்வதுடன், பொலிசார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் முன்வைத்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

????????????????????????????????????
You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven − three =

*