;
Athirady Tamil News

வவுனியாவில் புதிய ஜனநாயக முன்னனியின் காரியாலயம் திறந்து வைப்பு!! (படங்கள்)

0

வவுனியா தாண்டிக்குளத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் காரியாலயம் இன்று (08.11.2019) மதியம் 1.30 மணியளவில் அமைச்சர் மனோகணேசன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

தேசிய ஒருங்கினைப்பு உத்தியோகபூர்வ மொழிகள் , சமூக முன்னேற்றம் மற்றும் இந்து மத விவகார அமைச்சர் மனோகனேசன் அவர்களினால் உத்தியோகபூர்வமாக காரியாலயம் திறந்து வைக்கப்பட்டதுடன் மக்கள் சந்திப்பும் இடம்பெற்றிருந்தது.

ஜக்கிய தேசிய கட்சியின் மாவட்ட முகாமையாளர் துரை அவர்களின் தலமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் ஜக்கிய தேசியக்கட்சியின் வன்னி மாவட்ட இணைப்பாளர் ரசிகா கமகே , அமைச்சின் இணைப்பாளர் ஜனகன் விநாயகமூர்த்தி , பிரதேச சபை உறுப்பினர்கள் , பொதுமக்கள் உட்பட பலர் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − 3 =

*