;
Athirady Tamil News

சஜித் பிரேமதாச யாழ்ப்பாணத்தில்!! (படங்கள்)

0

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, தேர்தல் பரப்புரைக்காக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார்.

அவரை ஆதரிக்கு தேர்தல் பரப்புரைக்கூட்டம் யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்காவில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் ஆரம்பமானது.

இதன்போது யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு முன்பாக வாகனத்தில் இருந்து இறங்கிய சஜித் பிரேமதாசவுக்கு இராஜாங்க அமைச்சர் விஜயகலா மாலை அணிவித்து வரவேற்பளித்தார்.

அதனைத் தொடர்ந்து சஜித் பிரேமதாச குதிரை வண்டியில் ஏறி நல்லூர் சங்கிலியன் பூங்காவுக்கு சென்றார். அவருக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + one =

*