;
Athirady Tamil News

கொழும்பு – யாழ்ப்பாணம் – சென்னை இடையேயான விமான சேவை!! (படங்கள்)

0

கொழும்பு – யாழ்ப்பாணம் – சென்னை இடையேயான பரிச்சாத்த விமான சேவை இன்று ஆரம்பமானது.

உள்ளூர் விமான சேவை நிறுவனமான பிற்ஸ் எயார் (Fits Air) தனது முதலாவது சேவையை கொழும்பு இரத்தமலானை விமான நிலையத்தில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்தது.

இந்த விமான சேவைக்கு உள்பட்ட ஊழியர்கள் சிலர் இந்த விமானத்தின் மூலம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். இதன் பின்னர் இந்த விமானம் சென்னை விமான நிலையத்திற்கு புறப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் இருந்து மீண்டும் பிற்ஸ் எயார் (Fits Air) விமான சேவையின் முதலாவது விமானம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

இரத்மலானை விமான நிலையத்திற்கு வருவதற்கான திட்டமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் 11 ஆம் திகதி தொடக்கம் இந்த விமான சேவையில் இலங்கையர்கள் பயணிப்பதற்கு வாரத்தில் 3 நாள் சந்தர்ப்பம் உண்டு என்று சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × three =

*