;
Athirady Tamil News

கூட்டமைப்பின் கூட்டத்தில் வெறிச்சோடிக் காணப்படும் கதிரைகள்!! (படங்கள்)

0

சஜித் பிரேமதாச அவர்களை ஆதரிக்கும் கூட்டமைப்பின் கூட்டத்தில் வெறிச்சோடிக் காணப்படும் கதிரைகள்

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களை ஆதரித்து வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் மக்கள் ஆர்வம் காட்டி பெரியளவில் கலந்து கொள்ளவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று நடைபெறுகிறது.

இதில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன், பேச்சாளர் சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவமோகன், சாள்ஸ் நிர்மலநாதன், சாந்தி சிறிஸ்கந்தராஜா ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கி வருகின்றனர்.

இருப்பினும் குறித்த கூட்டத்திற்கு மக்கள் பெரியளவில் கலந்து கொள்ளவில்லை. வெறும் 70 பேர் வரையிலேயே மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படை மற்றும் பொலிசாரின் பாதுகாப்புடன் குறித்த கூட்டம் நடைபெறுகிறது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 + 8 =

*