;
Athirady Tamil News

ரெலோ குழப்பத்தால் செல்வம் எம்.பி ‘அப்செற்’: யாழ் உறுப்பினர்கள் சிலர் நீக்கப்படும் வாய்ப்பு!

0

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட கிளையின் ஒரு பகுதி உறுப்பினர்கள் தன்னிச்சையாக செயற்படுவது கட்சி தலைவர் செல்வம் அடைக்கலநாதனை கடுமையாக அதிருப்தியடைய செய்துள்ளது.

சஜித் பிரேமதாசவை ஆதரித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு நேற்று பிரச்சார கூட்டங்களை ஆரம்பித்திருந்தது. நேற்று வவுனியா, மாங்குளத்தில் நடந்த பிரச்சார கூட்டங்களில் செல்வம் அடைக்கலநாதன் கலந்து கொண்டிருக்கவில்லை. யாழ் மாவட்டத்தில் ஏற்பட்ட குழப்பங்களையடுத்தே அவர் இந்த கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கவில்லை.

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென ரெலோ முடிவெடுத்திருந்த நிலையில், நேற்று யாழ் மாவட்டக்கிளையின் கூட்டத்தில் கூடியவர்களில் பெரும்பான்மையானவர்கள் சிவாஜிலிங்கத்தை ஆதரிப்பதென்ற முடிவெடுத்திருந்தனர்.

இந்த முடிவை அறிந்ததும் கட்சித்தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கடுமையான “அப்செற்“ அடைந்ததாக தெரிகிறது. கட்சியின் செயலாளரின் பின்னணியில் இந்த நகர்வுகள் நடப்பதாக கட்சிக்குள் கருதப்படுவதால், இந்த விவகாரத்தை எப்படி முறியடிப்பதென கட்சி தலைமை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக அறிய முடிகிறது.

இதன் தொடர்ச்சியாக, ரெலோவின் யாழ் மாவட்டக் கிளையிலிருந்து அதிரடியாக சிலர் “தூக்கியெறியப்பட“ முடிவாகியுள்ளதாகவும் அறிய முடிகிறது.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

துரோகியை விட எதிரியை நம்பலாம்… முன்னாள் போராளிகளின் பாதுகாப்பு மகிந்தவிடம்: விடுதலைப்புலிகள் அறிவிப்பு!!

சிவாஜிக்கே ஆதரவு: ரெலோவிற்குள் இன்னொரு ரெலோ முடிவு!! (படங்கள்)

‘ரெலோ செல்வம் கட்சிக் கட்டுப்பாட்டை மீறலாம்… நான் மீறினால் தான் பிரச்சனையா?’: விடாக்கண்டனாக ரெலோ சிவாஜி..!! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 + 18 =

*